சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

0
gif 1

சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதம் சதுர்த்தசியுடன் கூடிய அமாவாசையை மகா சிவராத்திரி என்று உலகமே கொண்டாடுகிறது.

நேற்று நேரலையாக டிவியில் பல கோயில்களின் சிவராத்திரி அபிஷேகங்களை பார்த்திருப்பீர்கள்.

ஏன் இந்த சிவராத்திரி? எதற்காக அனைவரும் விழித்திருக்க வேண்டும்? என்பது பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

gif 3

பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.

ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது.

gif 4

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு.

ஒரு குரங்கு காட்டிலே வில்வமரத்தில் உட்கார்ந்து கொண்டு இரவு முழுதும் வில்வ இலைகளை பறித்து கீழே எறிந்து கொண்டிருந்தது. அந்த வில்வ மரத்தினடியில் சிவலிங்கத்திருமேனி ஒன்று இருந்தது. யாரும் பராமரிக்காத அந்த சிவலிங்கத்தின் திருமேனியில் இந்த குரங்கு எரிந்த ஒன்றிரண்டு வில்வ இலைகள் விழுந்தது. உடனே சிவன் அந்த குரங்கிற்கு காட்சி கொடுத்து அதனை முசுகுந்த சக்கரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறக்கச்செய்தான் என்பர்.

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,
முதலும், முடிவும் இல்லாதவர்.

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.