களம் இலக்கிய அமைப்பின் சார்பில்“வேள்பாரி” அறிமுக விழா !

திருச்சி அஜந்தா ஹோட்டலில் களம் இலக்கிய அமைப்பின் சார்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” என்ற வரலாற்று நூல் அறிமுக விழா நடைபெற்றது.
களம் அமைப்பு வேள்பாரி
Prev 1 of 0 Nextஇதில் ஏற்புரையாற்றிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசுகையில், வேள்பாரி என்ற கதை தொடர்கதையாக வந்த போது வாசகர்கள் கொடுத்த வரவேற்பு பிரமிக்க வைத்தது. இரண்டரை வருடங்கள் தொடர்ந்து இந்நாவலை எழுதினேன். நாவலையோ அல்லது சிறுகதைகளையோ வாசகர் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த வாசகருக்கு நம்பிக்கை தருகிற எழுத்தே சிறந்த எழுத்தாக இருக்க முடியும். தமிழர்களின் அறம்,பண்பாடு,கலாசாரம் ஆகியன முறையாக கதையில் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.


களம் அமைப்பின் உறுப்பினர் சேதுராமன் தலைமை வகித்தார். சுதா பன்னீர்செல்வம், சத்யமூர்த்தி, பழனியப்பன், அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களம் அமைப்பின் பொறுப்பாளர் துளசிதாசன் வரவேற்று பேசினார்.
நூல் ஆசிரியர் வெங்கடேசனுக்கு களம் அமைப்பு சார்பில் மாலை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கி கவுரவித்தனர். கவிஞர்.நந்தலாலா, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், குறும்பட இயக்குநர்கள் கரு.பழனியப்பன், பாஸ்கர்சக்தி, எம்.பழனியப்பன் , துளசிதாசன் ஆகியோர் பேசினர். களம் உறுப்பினர் அரு.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
