அண்ணன் அடைக்கலராஜின் உடன்பிறந்த தங்கை! மேயர் எமிலி ரிச்சர்டு!

0
Full Page

 

அண்ணன் அடைக்கலராஜின்
உடன்பிறந்த தங்கை!

இன்று அவருக்கு 75வது பிறந்தநாள்!

திருச்சி மாநகராட்சியின் துணை மேயராக மூன்று வருடமும்
மேயராக இரண்டு வருடமும் பொறுப்பு வகித்து அந்தப் பதவிகளுக்கு பெருமை சேர்த்த பெருமைக்குரியவர்.

வணக்கத்திற்குரிய என்ற மேன்மையான
வார்த்தைக்கு பொதுமக்கள் மத்தியில்
பொருத்தமானவர் என்று போற்றப்பட்டவர்.

எனக்குத் தெரிந்து கட் அன்ட் ரைட் என்ற வார்த்தைக்கு வாழும் உதாரணமாக திகழ்ந்தவர் திகழ்பவர் இவர்தான்.

இவர் துணை மேயராக இருந்தபோது ஒருமுறை முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அன்றைய மத்திய மந்திரியுமான பி எம் சையது அவர்கள் திருச்சியில் மத்திய அரசு விழாவிற்காக வந்திருந்தபோது

அண்ணே அண்ணே என்று அடைக்கலராஜை சுற்றியும் அக்கா அக்கா என்று துணைமேயர் எமிலியக்காவை சுற்றியும் நூற்றுக்கணக்கான நபர்கள் ஈ மொய்ப்பதைப்போல சுற்றிச் சூழ்ந்து நின்றதைப்பார்த்து
இப்படி ஒரு அண்ணனும் இப்படி ஒரு அக்காவும் இந்தியா முழுக்க இருந்துவிட்டால் காங்கிரஸ் காலம் முழுக்க ஆளும் என்று மேடையில் பேசியது அன்றைக்கு எல்லா பத்திரிக்கையிலும் எட்டுகால செய்தியானது…

Half page

ஸ்வச் பாரத் என்ற மோடியின் இன்றைய திட்டத்தை அன்றைக்கே
குப்பையில்லா மாநகரம் என்ற பேனரில் திருச்சியை தூய்மையான மாநகராக்கி சாதனை புரிந்தவர் அன்றைய பொறுப்பு மேயர் எமிலி
ரிச்சர்டு!

ஏழைகளிடம் மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் கேட்க கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தியவர்…

தன் செல்போன் நம்பரை பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தி
இரவு பகல் எந்த நேரமானாலும் மாநகரப்பிரச்சனைகளை மக்கள் நேரடியாக தன்னிடம் சொல்லலாம் என்று புதுமைசெய்து

அடுத்தநாள் அதிகாரிகள் அந்தக்குறையை தீர்த்தவுடன் குறைசொன்ன நபரே
அதிகாரிகள் வந்து சரிப்படுத்தியதை சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தி மாநகர மக்களும் மாநகராட்சி அதிகாரிகளும் ஒரு வண்டியில் பூட்டிய இரு காளைகள் அரசுவண்டி அழகாய் ஓட இவர்களின் ஒற்றுமை அவஸியம் என்று கூறி
அன்றைய முதல்வர் கலைஞரால் பாராட்டப்பட்டவர்…

இன்றும் நூற்றுக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்களை ஒருங்கிணைத்து

ஆயிரக்கணக்கான மகளிரை
வழி நடத்தி
தலை நிமிர்ந்து வாழ
வகை செய்து வருகிறார் என்பது அவரின் சேவைக்கு
ஒரு சின்ன சாம்பி்ள்!

அவருக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.

வாழ்க்கை முழுக்க சேவைச் செம்மலாகவே வாழும் அக்கா ஆரோக்யமாய் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.