சர்வதேச விருதுகளை குவிக்கும் தமிழ் படம்!

0
1

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, “கேளடி கண்மணி”,  “நீ பாதி நான் பாதி”,  “நேருக்கு நேர்”,  “ஆசை”,  “ரிதம்” உள்ளிட்ட வெற்றி படங்களை எடுத்த இயக்குநர் வசந்த். சூர்யா, ஜோதிகா, சிம்ரன் போன்ற திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய இவரிடம், இன்றைய கால இளைஞர்கள் கூட ஒரு படத்திலாவது உதவி இயக்குநராக  பணியாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். எஸ்.ஜே.சூர்யா கூட இவரின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறந்த திரைப்பட இயக்குநரான இவர், புத்தக வாசிப்பிலும் அதிக பிரியம் கொண்டவர். அதனால் தானோ என்னவோ! எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் உள்ளிட்ட மூவரின் சிறுகதைகளை கொண்டு அதனை திரைக்கதையாக்கி “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, கருணாகரன், மாஸ்டர்.ஹமரேஷ், நேத்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

இப்படம் திரையரங்கிற்கு வெளிவருவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்று குவித்து வருகிறது. குறிப்பாக மும்பை, கேரளா, புனே, ஸ்வீடன்  போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு ஆசியாவின் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.