புதுப்பொலிவுடன் திருச்சி ஜங்ஷன் ரயில்வே முன்பதிவு மையம் திறப்பு

0
D1

புதுப்பொலிவுடன் திருச்சி ஜங்ஷன் ரயில்வே முன்பதிவு மையம் திறப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதுப்பிக்கும் பணி நடந்தது. இந்த பணிக்காக முன்பதிவு மையம் மூடப்பட்டிருந்தது. மேலும் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையத்தில் முன்பதிவு மையம் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்ததால் முன்பதிவு மையம் திறக்கப்பட்டது.

D2
N2

புதுப்பொலிவுடன் தற்போது முன்பதிவு மையம் செயல்பட தொடங்கி உள்ளன. மொத்தம் 12 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 முதல் 5 கவுண்ட்டர்கள் வரை முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்படுகின்றன. 7, 8, 9 ஆகிய கவுண்ட்டர்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இதேபோல 12-வது கவுண்ட்டரில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள 4 கவுண்ட்டர்கள் கூட்ட நேரத்தில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில் நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த முன்பதிவில்லா டிக்கெட் மையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. ஒரு பலகையில் இதற்கான அறிவிப்பை ரெயில்வே அதிகாரிகள் எழுதி வைத்துள்ளனர். முன் அறிவிப்பின்றி முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். பயணிகள் பலர் ஏற்கனவே செயல்பட்ட முன்பதிவு மையத்திற்கு வந்து பின்னர் புதிதாக திறக்கப்பட்ட முன்பதிவு மையத்திற்கு சென்று டிக்கெட் வாங்கினர்.

முன்பதிவு மையத்தில் ஏற்கனவே இருந்த ரெயில்வே கால அட்டவணைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வைக்கப்பட்டிருந்த மேஜைகள் தற்போது இல்லாமல் உள்ளது. அவற்றை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.