திருச்சி காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யாத கட்சிக்கே எங்களின் ஓட்டு !

0
Business trichy

திருச்சி காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யாத கட்சிக்கே எங்களின் ஓட்டு !

 

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்கும் வகையில் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்களை பொதுமக்களும் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகிறார்கள்.

Rashinee album

 

Image

இதற்கிடையே பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கே தேர்தலில் வாக்களிப்போம் என நிபந்தனை விதித்து வருவதையும் ஆங்காங்கே காண முடிகிறது.

 

அந்தவகையில் திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஷபி அகமது ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சியினருக்கு நிபந்தனை விதிக்கும் வகையில் திருச்சியில் நூதன சுவரொட்டியை பல்வேறு பகுதிகளிலும் ஒட்டி உள்ளனர். அந்த சுவரொட்டியில், “திருச்சி தொகுதி வேட்பாளர்கள் கவனத்துக்கு… வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி காந்திமார்க்கெட்டை நிரந்தரமாக இங்கேயே இயங்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே எங்களின் ஓட்டு” என்று குறிப்பிட்டதுடன், பல்வேறு கட்சிகளின் சின்னங்கள் மற்றும் கொடிகளையும் அந்த சுவரொட்டியில் இடம் பெற செய்துள்ளனர். திருச்சி காந்திமார்க்கெட்டை இடமாற்றம் செய்வது தொடர்பாக வியாபாரிகளுடன் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது காந்திமார்க்கெட் வியாபாரிகள் ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.