திருச்சியில் திருநாவுக்கரசர் படத்தின் மீது  தார் பூசியது யார் ?

0
Business trichy

திருச்சியில் திருநாவுக்கரசர் படத்தின் மீது  தார் பூசியது யார் ?

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் சமீபத்தில் மாற்றப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலமன்றத்தில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டு இருந்தது.

loan point
web designer

தற்போது தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், திருச்சியில் உள்ள அலுவலக பதாகையில் அவரது உருவப்படம் வைக்கப்படாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசர் படத்தை மாற்றிவிட்டு அழகிரி படத்தை வைக்க வேண்டும் என்று கூறி வந்தனர். ஆனால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களோ கே.எஸ்.அழகிரி படம் வைக்கப்பட்டாலும், அதன் அருகே திருநாவுக்கரசர் படமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

nammalvar

இந்தநிலையில் 01.03.2019 காலை திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த திருநாவுக்கரசர் படம் தார்பூசி அழிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த பதாகை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் அதே இடத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் யாரோ? திருநாவுக்கரசரின் படத்தில் தார்பூசி அழித்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

 

சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவி போனாலும் எம்.பி. தேர்தலில் சீட்டு கிடைக்கும் அதுவும் திருச்சி தொகுதியில் சீட்டு கேட்டு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் தீடீர் என அவருடைய படத்தின் மீது தார் ஊற்றி பூசியிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோஷ்டி பூசல் காரணமாக கட்சியினரே இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரும் காரணமா? என நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் படம் தார்பூசி அழித்துள்ள சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.