உறையூர் “சார்பதிவாளர் அலுவலகத்தின்”அவல நிலை!

0

உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அண்ணாமலை நகர் ஏ.பி.சி. ஹாஸ்பிட்டல் அருகில் இயங்கி வந்தது.இயங்கி வந்த காலம் முதல் பல குளறுபடிகள் நடைபெற்றன.குறிப்பாக நேரடியாக ஒரு அதிகாரியை தொடர்பு கொள்ள முடியாது. புரோக்கர்கள் மூலமாகவே நாம் அணுக முடியும்.மேலும் விண்ணப்ப படிவங்களை கேட்டால் வெளியே உள்ள புரோக்கர்களை அணுகவும் என்றே பதில் வரும்.அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இயங்கி வந்தது.இப்போது ஒரு படி மேலே சென்று விட்டது உறையூர் சார் பதிவாளர் அலுவலகம்.முன் அறிவுப்புகள் ஏதுமின்றி உறையூர் மருதாண்ட குறிச்சி என்கின்ற இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் மூன்று மாதங்களாக தற்போது இயங்கி வருகின்றது. இங்கு செல்ல மக்களுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை. இருசக்கர,மற்றும் நான்கு சக்கர, வாகனங்களை நம்பியே இருக்கும் சூழல் உருவாகி வருகின்றன.இதுபோக குடிக்க தண்ணீர் இன்றியும், கடைகளில் விற்கும் தண்ணீரை வாங்கும் அவலநிலை இருக்கின்றன. கடைகளுக்கும், அலுவலகத்திற்கும், கமிஷன் முறையில் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றனவோ?என்று தோன்றுகின்றது. மருதாண்ட குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களும், முதியோர்களும்,மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.இவ்விடத்தில் ஒரு அறிவிப்புப் பலகை கூட இல்லை.இதனால் பெரிய குழப்பத்திற்கும் உள்ளாகிவருகின்றாா்கள். இத்தகைய சிரமத்தைப் போக்கி உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் பழைய இடத்திற்கு அல்லது போக்குவரத்து வசதி மிகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது…

Leave A Reply

Your email address will not be published.