1934- களில் தமிழக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்!!!

0
1

அன்றைய நாட்கள் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும். ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.

அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர்.

தமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்). கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி, முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி.

3

Leave A Reply

Your email address will not be published.