கொலை-பகை-விருந்து

0
1

பாமக நிறுவனர் ராமதாஸ் பிப்ரவரி 19 ஆம் தேதி அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டு முதல்வர் வீட்டுக்கு சென்றார். அப்போது தைலாபுரத்தில் வரும் வெள்ளிக் கிழமை விருந்துக்கு வருமாறு முதல்வர், துணை முதல்வரை அழைத்தார்.
பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்துக்குப் புறப்பட்டார்.

இந்த விருந்தில் சட்டத் துறை அமைச்சர் சிவி. சண்முகம் கலந்துகொள்ள மாட்டார் என்று செய்திகள் பரவின. அதற்குக் காரணம் கொலைப் பகைதான்.
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகத்தை எதிர்த்து பாமக வேட்பாளர் கருணாநிதி போட்டியிட்டார், மே 8 ஆம் தேதி வாக்குப் பதிவின்போது பாமக, அதிமுக,வினருக்கும் மோதல் ஏற்பட்டது அதன் விளைவாக அன்று இரவு சிவி.சண்முகத்துக்குக் குறிவைத்து அவரது வீட்டிற்கு வந்த கும்பல் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது அதிமுக நிர்வாகியும் சண்முகத்தின் உறவினருமான முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார், சண்முகம் அதிர்ஷ்டவசமாக காரின் அடியில் புகுந்து உயிர் தப்பினார். இதன் விளைவாக சி.வி.சண்முகத்துக்கும், பாமக தலைமைக்கும் அறிக்கை போரும், வழக்குப் போரும் தொடர்ந்தன.

 

2

இந்த நிலையில்தான் தன்னைக் கொலை செய்ய திட்டமிட்ட பாமக தலைமையின் வீட்டில் விருந்து சாப்பிடுவதா என்று சிவி சண்முகம் கடும் கோபத்தில் இருந்து வந்தார். ராமதாஸ் கொடுக்கும் விருந்துக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு போவீர்களா என்று நேற்று நிருபர்கள் கேட்டதற்குச் சிரிப்போடு வெளியேறினார் விழுப்புரத்தில்.

4

இந்த நிலையில்தான் சென்னையில் இருந்து 6 மணிக்குக் கிளம்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போதுதான் துணை முதல்வர் மதுரையில் இருந்து வந்துகொண்டிருந்தார். முதல்வர் மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் அருகே வந்தபோது துணை முதல்வரும் அங்கே வந்து சேர்ந்துகொண்டார்.
திண்டிவனம் சர்க்யூட் ஹவுஸுக்கு இரவு 8.30 மணிவாக்கில் அடைந்தனர்.

 

அங்கிருந்து 8.45 மணிக்குக் கிளம்பினார்கள். அப்போது சிவி சண்முகம் அங்கிருந்தபடியே புறப்படத் தயாரானார். ஆனால் முதல்வர் எடப்பாடி, ‘எல்லாம் எனக்குத் தெரியும், நீங்க என் வண்டியில ஏறுங்க. நீங்க இன்னிக்கு அமைச்சர்’ என்று சிவி. சண்முகத்தை சமாதானப்படுத்தி தன் காரிலேயே ஏற்றிக் கொண்டார். கூடவே உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவும் எடப்பாடி வண்டியில் இருந்தார். ஓபிஎஸ் வண்டியில் லட்சுமணன் எம்.பி. ஏறிக் கொண்டார்.
அதன் பின் தங்கமணி, வேலுமணி போனார்கள். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஒருவகையில் ராமதாஸ் குடும்பத்துக்கு சம்பந்தி என்பதால் முன்பே சென்றுவிட்டார்.

இரவு தைலாபுரம் தோட்டத்தில் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சி.வி. சண்முகத்தை முதல்வர்தான் அங்கே முன்னிறுத்துகிறார். சிவி சண்முகத்துக்கு அன்புமணி பொன்னாடை போர்த்தியபோது, 13 ஆண்டு கொலைப் பகைக்கு ஒரு முற்றுப் புள்ளி விழுந்தது போன்ற ஒரு சூழல் அங்கே ஏற்பட்டது.

ராமதாஸ், அன்புமணி, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய நால்வரும் தனியாக இருபது நிமிடம் பேசி பாமக தொகுதிகளை முடிவெடுத்தனர். பின் இரவு 10.25 க்கு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.