திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

0

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் போட்டிகள் தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வகை சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியினை பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா தொடங்கி வைத்தார். இதில் முதல் பிரிவில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புமாணவர்கள் அறிவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

இரண்டாம் பிரிவில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆற்றலின் வகைகள், கலப்படம், வேளாண்மையின் வகைகள் என்னும் தலைப்புகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

food

மூன்றாம் பிரிவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியலாளர்களின் விதிகளை நிரூபித்தல், மக்களுக்காக அறிவியல், அறிவியலுக்காக மக்கள் என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

நான்காம் பிரிவில் ஒன்ப தாம் வகுப்பு மாணவர்களுக்கு தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மக்களுக்கு இடையேயான அறிவியலின் தாக்கம் என்னும் தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகள் அனைத்திற்கும் பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளியின் முதுகலை அறிவியல் ஆசிரியர்கள் ஜெயசித்ரா, நான்சி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை தேர்வு செய்தனர்.

பள்ளியின் முதல்வர் க.வனிதா அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் சீர்திருத்த சிந்தனை வினாக்களை எழுப்பி மாணவர்களை சிந்திக்க வைத்தார். அதைத் தொடர்ந்து அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.