திருச்சியில் சுடச் சுட பாய் கடை வடை !

0
Full Page

திருச்சியில் சுடச் சுட பாய் கடை வடை

 

காலையிலும் மாலையிலும் தவறாது டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் போல் வடை, போண்டா என சூடாக எப்போதுமே சுவைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு திருச்சியில் பெஸ்ட் சாய்ஸ் கோர்ட் அருகே ஹீபர் சாலையில் உள்ள பாருக் டீ, வடை கடை தான் என்கிறார்கள் வடை பிரியர்கள். கடை பேரு என்னமோ பாருக் வடை கடை தான். ஆனால், பாய் வடை கடை என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.

எந்தநேரமும் சூடாக கிடைக்கும் வடையால் தான் இந்த கடைக்கு இவ்வளவு மவுசு…

ஒரு பக்கம் கிரைண்டரில் மாவு ஆட, மறுபுறம் ஒருவர் எண்ணையில் வடையை பொரித்து எடுக்க, பக்கத்திலே கருவேப்பில்லை, வெங்காயத்தை இருவர் வேகமாக நறுக்க, ஆரவாரமாய் வியாபாரம் செய்து கொண்டிருந்த பாய் வடை கடை உரிமையாளர் பாருக்கிடம் சுடச் சுட வடையை சுவைத்துகொண்டே பேசினோம்.

 

Half page

“காலையில 8 மணிக்கு ஆரம்பிக்கிற கடை இடையில் சாப்பாடு நேரமாக 2 முதல் 3 மணி வரை தான் சற்று கூட்டம் குறையும். சாயங்காலம் 7 மணி வரை அடுப்பில் வடை பொரித்துக்கொண்டே இருப்போம். முதலில் டீக்கடைக்கு வருபவர்களுக்கு வடை போட ஆரம்பித்து தான், இப்போது டீயை விட அதிகமாக விற்பது வடைதான். அதனால் பக்கத்திலேயே தனியாகவே வடை கடை போட்டுவிட்டோம்.

நாங்க 30 வருடங்களுக்கு மேலாக இங்கே கடையை நடத்தி வறோம். எனக்கு திருச்சி தான் சொந்த ஊரூ. கோர்ட் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், இது போக பொதுப்பணித்துறை அலுவலர்கள் என அனைவருக்குமே நம்ம கடை வடைன்னா அவ்வளவு இஷ்டம். எந்த கலப்படமும் இல்லாம கண்ணு முன்னாடியே மாவு அரைச்சு வடை சுடுகிறோம்.

காலை நேரத்தில இனிப்பு போண்டா, மசால் வடை, உளுந்த வடை, உருளைகிழங்கு போண்டா இதெல்லாம் சுடச்சுட கிடைக்கும். நீங்க எப்போ கடைக்கு வந்தாலும் டேஸ்டாக, சுடச் சுட ஏதேனும் ஒரு வடை சாப்பிடலாம். அதனால தான் இவ்வளவு பேமஸ்.” என்கிறார் கடையின் உரிமையாளர் பாருக்.

திருச்சி கோர்ட் அருகே சென்றால், நீங்களும் சுடச் சுட கிடைக்கும் இந்த பாய் கடை வடையை சுவைத்துதான் பாருங்களேன்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.