10, 11, 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு வரும் மார்ச் 01ம் தேதி தொடங்கி 19.03.2019 வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் 247 பள்ளிகளை சேர்ந்த 14,950 மாணவர்களும், 17,704 மாணவியர்களும் என மொத்தம் 32,654 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி ஆரம்பித்து மார்ச் 19ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வில் 247 பள்ளிகளைச் சேர்ந்த 14,950 மாணவர்களும், 17,704 மாணவியர்களும் என மொத்தம் 32,654 பேர் தேர்வெழுதுகிறார்கள். இதற்காக 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்தா 2

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 6ம் தேதி ஆரம்பித்து மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை மாணவியர்கள் 14,687 நபர்களும், மாணவர்கள் 14,824 பேர் என மொத்தம் 31,561 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வுக்களுக்கான வினாத்தாள்கள் 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.

‌சந்தா 1

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி ஆரம்பித்து மார்ச் 29ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 441 பள்ளிகளை சேர்ந்த மாணவியர்கள் 17,911 நபர்களும், மாணவர்கள் 18,061 நபர்களும் என மொத்தம் 35,972 நபர்கள் எழுகின்றனர். இத்தேர்வுக்காக 159 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் நன்முறையில் தயார் செய்து தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுக்காலங்களில் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொழுதுபோக்கு நேரங்களை குறைக்க வேண்டும் எனவும் தேர்வுக்காலங்களில் தங்களது உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் நன்முறையில் தங்களை தயார்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுதெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.