நாம் இருக்கும் இடம் கோயில் போன்றது உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு .

0
Business trichy

புதுக்கோட்டைலேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயோன் சர்வதேசபள்ளியின் 8-ம் ஆண்டுவிழாவானது இன்றுநடைபெற்றது.

பள்ளியின் இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் , இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன் ,பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரிஆகியோர் முன்னிலையில் சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், சேவைவரிகண்காணிப்பாளரும்,சேலம் தமிழ்நாடு ரஞ்சிகோப்பை தேர்வாளருமாக பணியாற்றி வரும் சந்திரமௌலி சிறப்பு விருந்தினர்களாக வருகைத்தந்தனர்.

பள்ளியின் இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன்  சிறப்புவிருந்தினர்களை அறிமுகப்படுத்தி, வரவேற்புரை வழங்கினார்.  பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளரும், இணை இயக்குநருமான ஏஞ்சலின் ஜோனத்தன் அவர்கள் 2018-2019–ம் கல்வியாண்டில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள், ஆசிரியர்கள் வெளியிடங்களுக்கு சென்று கலந்து கொண்ட பயிற்சிப்பாசறைகளையும், மாணவர்கள் சென்று வந்த கல்விச் சுற்றுலா மற்றும் மாணவர்களின் களப்பயணம் குறித்தஆண்டுஅறிக்கைவாசித்தார்.  2017-18 –ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றமாணவர்களுக்கும், IIT-JEE Main (ஐ.ஐ.டி. ஜெ.யி.யி.- மெயின்) நுழைவுத் தேர்வில் மாவட்டதில் முதலிடம் பெற்றமாணவர்களுக்கும் , விளையாட்டுபோட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிபதக்கங்களைப் பெற்றமாணவமாணவியருக்கும் பரிசுகள் வழங்கிஊக்குவித்தனர்.

Kavi furniture
MDMK

சிறப்புவிருந்தினர் சென்னைஉயர்நீதிமன்றநீதிபதி சுவாமிநாதன் உரையாற்றினார். 

அவர்தம் உரையில் நாம் இருக்கும் இடம் கோயில் போன்றது. இப்பள்ளியில் சேவைமனப்பான்மையும், ஒழுக்கமும் நிறைந்தகல்வியும் கற்பிக்கப்படுவதுபாராட்டிற்குரியதாகும். அதற்குஉதாரணமாகத்தான் கஜாபுயலுக்கு பாதிக்கப்பட்டகிராமங்களுக்கு செய்த நிவாரண நிதி உதவி. கேரளாவில்  கொடுக்கப்பட்ட நிவாரணநிதி மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் அனைத்தும் பாராட்டிற்குரியதாகும். அதோடு இப்பள்ளியில் மாணவர்கள் கல்வியில் காட்டுகின்றஆர்வமும்,மாணவர்கள் முன்னேற்றத்திற்குபள்ளியில் எடுக்கப்படுகின்ற முயற்சிகளும் பாராட்டிற்குரியது.  மாணவர்கள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள். மாணவர்கள் இன்று வளர்ச்சியடைந்துள்ள நவீனதொழில் நுட்பத்தை பயன்படுத்தி சரியான வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து முன்னேற்றம் நோக்கிசரியான இலக்கைதேர்ந்தெடுத்துபயணிக்கவேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் நல்லநிலையை அடைய சிறுவயது முதல் நல்லபழக்கங்கள், நல்ல எண்ணங்களை வளர்த்துகொள்ளவேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைபின்பற்றவேண்டும். அப்போதுதான் வாழ்வில் நல்லநிலையைஅடையமுடியும் என்று கூறிமாணவர்களைஉற்சாகப்படுத்தும் விதமாய் பேசினார். 

கௌரவவிருந்தினராககலந்துகொண்டசேவைவரிகண்காணிப்பாளரும்,சேலம் தமிழ்நாடு ரஞ்சிகோப்பை தேர்வாளருமான பணியாற்றிவரும் சந்திரமௌலி தனதுஉரையில் மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் செலுத்தவேண்டும்.  விளையாட்டும் வாழ்க்கையின் ஒருஅங்கம். விளையாட்டு மனதை புத்துணர்ச்சியுடன் இருக்கவைக்கும், பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தவிளையாட்டில் ஈடுபாடு என்பதை அறிந்து அதில் அந்தகுழந்தை சாதனைபடைக்க ஊக்குவிக்க வேண்டும் என்றுஉரையாற்றினார்.

பள்ளிமுதல்வர் டாக்டர் ஜலஜாகுமாரி நன்றியுரைக் கூற கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.  கலைநிகழ்ச்சியானதுமழலையர் பிரிவுமுதல் பதினொன்றாம் வகுப்புவரையுள்ளமாணவ,மாணவியரால் நடனம்,பாடல்,ஆங்கிலமற்றும் தமிழ் நாடகம்,எனபலகோணங்களில் பலநற்கருத்துக்களைவெளிப்படுத்தும் விதமாய் சிறப்பாக இரண்டுமணிநேரம் நிகழ்வுகள் அனைத்தும் பார்வையாளரை கவரும் விதமாய் அமைந்தது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.