தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை

0
Full Page

திருச்சிராப்பள்ளியில் 2017-2018ஆம் ஆண்டில் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் SDAT ஊக்கத்தொகையாக ரூபாய் 2,17,000 உதவி ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், 2017-2018ஆம் ஆண்டில் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் SDAT ஊக்கத்தொகையாக ரூபாய் 2,17,000 உதவி ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று(26.02.2019) வழங்கினார்.

Half page

2017-2018ஆம் ஆண்டில் குத்துச்சண்டை, டென்னிஸ், வாலிபால், தடகளம், கால்பந்து, வாள்சண்டை போன்ற பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் SDAT ஊக்கத்தொகையாக பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 10,000, கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 13,000ம் வீதமும் மொத்தம் 17 நபர்களுக்கு ரூபாய் 1,85,000மும்,    விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி ஊக்கத்தொகையாக தங்க பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூபாய் 6000மும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூபாய் 4000மும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூபாய் 2000 வீதம் மொத்தம் 9 நபர்களுக்கு ரூபாய் 32,000 என பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 வீரர், வீராங்கனைகளுக்கு ரூபாய் 2,17,000 உதவி ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று (26.02.2019) வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பிரபு கலந்து கொண்டார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.