களியாட்டம்

0
Business trichy

காளிவட்டம்

உய்யங்கொண்டான் கோவிலில் இருந்து புத்தூருக்கு குழுமாயி அம்மன் செல்லும் நிகழ்வே காளிவட்டம். உய்யங்கொண்டான் கோவிலில் பூஜை முடிந்தவுடன் சூலாயுதத்துடன் சிவப்பு துணி போர்த்திய கொடியமுனியும், உறையூர் மேட்டுக்குடியில் செய்யப்பட்ட இரு கிளிகளுடன் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட மாலையுடனும், கையில் தீப்பந்தத்தை வைத்தப்படியே மருளாளியையும், குழுமாயி அம்மனையும் மக்கள் தூக்கிய படியே பக்தர்கள் குழுமாயி கோயிலின் வாசலில் ஒலிக்கக்கூடிய தாரை, தம்பட்டை முழங்க குழுமாயி அம்மனை வண்ணாரப்பேட்டைக்கு கொண்டு வருகின்றனர். இடையில் குழுமாயிஅம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள வயல்காட்டில் குழுமாயி அம்மனை மருளாளி சுற்றிவருகிறார். அப்போது ஆயி என்று நிலமதிர அவர் கத்தும் போதும் அவருடைய உக்கிரமான முகத்தை பார்க்கும் போது உண்மையான கருப்பண்ணசாமியின் தோற்றத்தை மக்களால் உணரமுடிகிறது.

Kavi furniture

பின்னர் மருளாளியின் கழுத்தில் இருக்கும் கிளிகளை மக்கள் வாங்கி கூடையில் வைத்துகொள்கின்றனர். பின்னர் அந்த வயல்காட்டின் வழியாக வண்ணாரப்பேட்டையை வந்து அடைகின்றனர். அவர்கள் வருவதை எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருக்கும் ஊர்மக்கள் குழுமாயி அம்மனும், மருளாளியும் வந்த உடன் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்கின்றனர்.

MDMK

படுத்தப்படியே கோவிலில் இருந்து தூக்கிவரப்படும் குழுமாயி அம்மன், வண்ணாராப்பேட்டை வந்த உடன் நிமிர்த்தியபடியே தேரில் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. மருளாளியை கோவிலில் ஐந்து நிமிடம் இறக்கிவிட்டு மீண்டும் மக்கள் தூக்கிக்கொள்கின்றனர். பின்பு தேர் அலங்காரம் செய்யும் வரையில், மருளாளியை தூக்கியபடியே மக்களின் மத்தியில் முன்னும், பின்னும் கையில் இருக்கும் தீப்பந்தத்தை ஆட்டியபடியே கொண்டுவருகின்றனர்.

அப்போது, குழந்தைகளை மருளாளியிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெறுகின்றனர் ஊர்மக்கள். மருளாளி குழந்தையை தூக்கினால் காத்து, கருப்பு எதுவும் அண்டாது என்பதும், ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கை. அலங்காரம் முடிந்தவுடன் மருளாளி முன்செல்ல குழுமாயி அம்மன் தேரில் பின்னே அழைத்துவரப்படுகிறார்.

பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள வண்ணாரப்பேட்டை எல்லைக்கோவிலில் ஆடுபலியிட்டு உத்தரவு பெற்றவுடன் அங்கு திரண்டு நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் மருளாளி முன்னே செல்ல மீண்டும் குழுமாயி அம்மனுடன் தேர்பின்னே செல்கிறது.

அதைத்தொடர்ந்து, புத்தூர் நான்கு ரோட்டில் காத்துகொண்டிருக்கும் அப்பகுதிமக்களிடம் மருளாளியையும், குழுமாயி அம்மனின் தேரையும் அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கின்றனர். பின்னர், புத்தூர் மந்தைக்கு குழுமாயிஅம்மனையும், மருளாளியையும் அழைத்துச்செல்கின்றனர்.
அங்கு குழுமாயி அம்மனுக்கு கோபுரம் கட்டப்படுகிறது. இக்கோவிலின் எல்லைகள் என்று சொல்லக்கூடிய கோவில் வாசல், கல்லாங்காடு, வண்ணாரப்பேட்டை, புத்தூர் மந்தை, கேலிக்காரன் தெரு, சூரியன் பாறை, புத்தூர், பிள்ளையார் கோவில் ரோடு, வடக்குத்தெரு களத்துமேடு, தெற்குத்தெரு எல்லைக்கல், சீனிவாசநகர், கீழலேற்றம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டு கொடியமுனியை சுற்றி கொண்டுவரப்படுகிறது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.