கல்விச் சீர்வரிசைப் பொருட்களை வழங்கும் விழா

0
Business trichy

திருச்சி மாவட்டம், இலால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளிக்கு அதன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பெற்றோர்கள், ஊர்மக்கள், முன்னாள் மாணவர்கள் பலர் திரளாக சென்று கல்விச் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த எசனைக்கோரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பெற்றோர்கள், ஊர்மக்கள், முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா கடந்த 24ம் தேதி நடந்தது. அதற்கு முன்னதாக பள்ளியில் புதிய கழிவறை கட்டிட திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி கீதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி மாலதி முன்னிலை வகித்தார்.

web designer

பெற்றோர்கள், ஊர்மக்கள், முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கும், 107 மாணவர்கள் பயன்பெறும் வகையில் பேன், குத்துவிளக்கு, சேர்கள், டம்ளர்கள், டீ பாய், அலுமினிய வாளிகள், பித்தளை தாம்பளங்கள், சுவர் கடிகாரம், ரேக்குகள், பிளாஸ்க், டிக்ஸ்னரி, புத்தகங்கள், சில்வர் பாத்திரங்கள், ஏ4 பேப்பர் பண்டல்கள் உள்ளிட்ட அனைத்து எழுது பொருட்கள் என ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் உள்ளிட்டோர் பள்ளி தலைமையாசிரியர் திருமாவளவன் தலைமையிலான ஆசிரியைகளிடம் வழங்கினர். இதனை அவர்கள் வாஞ்சையுடன் பெற்றுக் கொண்டனர்.

loan point

மேலவாளாடி பிள்ளையார் கோயில் இருந்து கல்வி சீர் பொருட்களுடன் எசனைக்கோரை மெயின்ரோடு வழியாக கிராமத்தில் உள்ள தெருக்களில் மேள தாளம் முழுங்க, மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்று பள்ளிக்கு வந்தடைந்த பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள், முன்னாள் மாணவர்களை ஆசிரியைகள் அனைவரும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்று மகிழ்ந்தனர். பேரணியில் பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

nammalvar

பள்ளி தலைமையாசிரியர் திருமாவளவன் வரவேற்றார். ஆசிரியை மேரி கிறிஸ்டினா நன்றி கூறினார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.