கலைக்காவிரி நுண்கலைப் பள்ளி-சான்றிதழ் மற்றும் பட்டயமளிப்பு விழா

0
Full Page

கலைக்காவிரி நுண்கலைப் பள்ளி நடத்தி வரும் பகுதி நேர இசை நாட்டியப் பயிற்சிகளின் அரங்கேற்ற விழா பிப்ரவரி 22, 23, 24 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் பிப்ரவரி 22ஆம் தேதியன்று நடத்தப்பட்ட அரங்கேற்ற விழாவிற்கு, தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகம் இசைத்துறைத்தலைவர் முனைவர் மாதவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பரதநாட்டியத்தில் 31பேர், குச்சுப்புடி 7பேர் வாய்ப்பாட்டில் 11பேர், வயலினில் 2பேர், வீணையில் 2ஒருவர் என மொத்தம் 53 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி தலைமையுரையாற்றினார். தனது தலைமையுரையில் “கலைக்காவிரியின் இத்தனை ஆண்டு கால கலைப்பணி ஒன்றே இதன் பெருமைக்குச் சான்று. இந்த பெருமையில் இன்றைய அரங்கேற்ற மாணவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். கலைக்காவிரியின் கலைப்பணி ஒரு மிகப்பெரிய மனிதகுல வளர்ச்சிப்பணியாகும்” என்று குறிப்பிட்டார்.

இரண்டாம் நாள் பிப்ரவரி 23ஆம் தேதியன்று நடைபெற்ற இசைப் பட்டயப்பயிற்சி, பரதநாட்டிய பட்டயப்பயிற்சி, மோகினியாட்டம், ஓவியம், புல்லாங்குழல், கீபோட்டு மற்றும் கிடார் சான்றிதழ் பயிற்சி மாணவர்களின் அரங்கேற்ற விழாவில் முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, மதுரை கலைமாமணி ஊ.டேவிட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பரதநாட்டியம் 23 பேர், இசையில் வாய்ப்பாட்டு 10 பேர், மோகினியாட்டம் 6 பேர், ஒவியம் 7 பேர், டிரம்ஸ் 3 பேர், கீ-போட்ர்டு 9 பேர்,  என மொத்தம் 58 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, தலைமையுரையாற்றினார். இவர் தனது தலைமையுரையில் “தமிழ் இலக்கியம் கலை இல்லாமல் இல்லை. ஒரு தலைமுறையின் சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பது கலைதான். கலைப் பயிற்சி ஒரு கடினமானப் பயிற்சிதான். ஆனால் இந்த கலைப் பயிற்சிதான் மூளைக்கு உற்சாகத்தைத் தருவது. இத்தகைய கலைப் பயிற்சியை கலைக்காவிரி அர்ப்பணிப்பு உணர்வோடு தந்து வருகிறது. கலைகளை கடைகோடி மனிதர்க்கும் இது கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இக்கல்லூரி திருச்சியிலே அமைந்தது இந்த திருச்சி மாநகரம் பெற்ற பெருமை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆற்றுவிப்பது வரவேற்புக்குரியது கலைதான் நல்லொழுக்கத்தையும் நல்ல பண்பையும் மனிதத்தையும் வளர்க்கும்”” என்று குறிப்பிட்டார்.

Half page

மூன்றாவது நாளாக பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற பரதநாட்டியம் மற்றும் இசை, நாட்டுப்புறச் சான்றிதழ் மாணவர்களின் அரங்கேற்ற விழாவில் திருவாரூர் அரசு இசைப்பள்ளி, பரத நாட்டிய ஆசிரியர் தஞ்சை நால்வர் வழி வந்த சந்திரசேகரன் தலைமையேற்று பரதநாட்டியம் 51பேர், நாட்டுப்புற நடனம் 8பேர், இசை வாய்ப்பாட்டு 10 பேர், கிடார் 2பேர், மற்றும் தபேலா 2பேர் என மொத்தம் 74 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி தலைமையுரையாற்றினார்.

தனது தலைமையுரையில் “கலைக்காவிரியில் பயிற்சி பெறுகின்ற இளம் சிறார்கள் விதைக்கப்படுகிறார்கள். இவர்கள் கலைத்துறையில் வளம் பெறப் போகிறார்கள். ஏன்பதற்கு இந்த கோலாகலமான அரங்கேற்ற விழாதான் அத்தாட்சி. குலைவழி மனிதம் மலர எனும் பொதுவான தேச நலனுடன் கூடிய, நல்லிணக்க நோக்கத்தோடு செயல்பட்டுவரும் கலைக்காவிரி, வருங்காலத்தில் ஒரு உலகத்தின் முக்கியமான பல்கலைக்கழகமாக உயரப்போவது திண்ணம்” என்று குறிப்பிட்டார்.

ஓவ்வொரு நாளும் அணிவகுப்போடு தொடங்கிய இந்த விழாவில் அரங்கேற்ற மாணவி ஒருவர் விளக்கை ஏற்றி வைக்க சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றினார்கள்.  இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இவ்விழாவில் இசை, நடன மாணவ, மாணவிகளின் அரங்கேற்ற கலை உருப்படிகள் மேடையில் நடத்தப்பட்டன. கலைக்காவிரியின் முதல்வர் முனைவர் நடராஜன், முதல் நாளும், இசைத்துறை உதவிப்பேராசிரியர் அருள்திரு ஜோசப் ஜெயசீலன் இரண்டாம் நாளும், செயலரும், இயக்குநருமான அருள்திரு சாமிநாதன் அடிகளார் மூன்றாம் நாளும் வரவேற்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிகளை கலைக்காவிரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் நடன உதவிப்பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் அவர்களின் தலைமையில் பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்களான பெனிட்டா பரலோகராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.