மத்திய அரசு சார்பில் ஈஷாவின் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்துக்கு தேசிய விருது.

0
1

மத்திய அரசு சார்பில் ஈஷாவின் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்துக்கு தேசிய விருது

மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் வழங்கினார்

மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் சார்பில் ஈஷா அறக்கட்டளையின் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்துக்கு தேசிய நீர் விருது நேற்று வழங்கப்பட்டது. மத்திய நீர் வளத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் மற்றும் துறை செயலாளர் யூ.பி.சிங் ஆகியோர் இவ்விருதை வழங்கி கெளரவித்தனர்.

4

நீர் வள மேம்பாடு, நீர் மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் 2007-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் தேசிய நீர் விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா புதுடில்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் (பிப்.25) நடைபெற்றது. அதில் ‘சிறந்த கல்வி மற்றும் வெகுஜன விழிப்புணர்வு முயற்சிகள்’ என்ற பிரிவில் ஈஷா அறக்கட்டளையின் ‘நதிகளை மீட்போம் இயக்கத்துக்கு தேசிய நீர் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை மாண்புமிகு மத்திய நீர் வளத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் மற்றும் துறை செயலாளர் திரு.யூ.பி.சிங் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர். மேலும், ரூ.2 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. ஈஷா அறக்கட்டளை சார்பில் ஈஷா தன்னார்வலர் விக்ரம் ஜித் அவர்கள் விருது மற்றும் ஊக்கத் தொகையினை பெற்றுக்கொண்டார்.

‘நதிகளை மீட்போம்’ என்னும் தேசிய அளவிலான இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். வறண்டு வரும் இந்திய நதிகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்துவதும், அவற்றை மீட்பதற்கு முழுமையான மற்றும் விரிவான திட்டத்தை உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் பிரதான நோக்கங்கள் ஆகும்.

2

இதற்காக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் 9,300 கி.மீ தானே கார் ஓட்டி சென்று நதிகள் மீட்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, ஒரே மாதத்தில் 16 மாநிலங்களுக்கு சென்று 23 முக்கிய நகரங்களில் 180 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளில் 13 மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், வணிகத் தலைவர்கள், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அத்துடன் உலக வரலாற்றில் முதல் முறையாக ‘நதிகளை மீட்போம்’என்ற மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கத்துக்கு சுமார் 16.2 கோடிமக்கள் ‘மிஸ்டு கால்’ மூலம் ஆதரவு அளித்தனர்.

இந்த இயக்கத்தின் முயற்சிகளால் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள்,கள விழிப்புணர்வுகள் மூலம் நதிகள் மீட்பு குறித்த விழிப்புணர்வு கோடிக்கணக்கான பொதுமக்களை சென்று சேர்ந்தது. ஊடகங்கள், சமூக நல அமைப்புகள், வணிக நிறுவனங்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலத் தரப்பினரும் இந்த விழிப்புணர்வு

பயணத்தில் பங்கெடுத்தனர். இதுதொடர்பாக, சுமார் 4,000 செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியாகின. மேலும், ஆன்லைன் ஊடகங்கள் மூலம் 40 கோடி பேருக்கு இதுதொடர்பான தகவல்கள் சென்று சேர்ந்தன.

இதையடுத்து, இந்திய நதிகளை மீட்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து ‘நிதி ஆயோக்’ அமைப்பிடம் வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நிதி ஆயோக் அமைப்பு அதை அமல்படுத்துமாறு 29 மாநில அரசுகளுக்கு 2018 ஜூன் 6-ம் தேதி பரிந்துரை அளித்தது.

இதன்பிறகு, பல்வேறு அரசுகள் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. திறமையும் ஆர்வமும் மிகுந்த 100 இளைஞர்கள் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்தில் முழு நேர தன்னார்வ தொண்டர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பயணித்து இத்திட்டத்தில் களப் பணியாற்றி வருகின்றனர்.

முதல்கட்டமாக, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் விதர்பா மண்டலத்தில் உள்ள ’ ‘வாகாரி’ என்ற நதியை மீட்டு புத்துயிர் ஊட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2019-ம் ஆண்டில் காவிரி நதியை மீட்பதற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது. மேலும், கர்நாடகாவில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்பட உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்