எம்ஜிஆரின் வரலாற்றுச் சாதனை

0
Full Page

பதவியேற்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யார், யார் அமைச்சர்கள் ஆகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மேடை தயார். ஆளுனர் வந்தார். எம்.ஜி.ஆர். வந்தார். மேடைக்கு முன்னால் கட்சியின் முக்கிய தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தனர். ஆளுநர் பதவி பிரமாணத்தை தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார். விழா முடிந்தது.

 

எல்லோரும் புறப்பட்டு விட்டனர். ஆம். அன்றைய தினம் முதலமைச்சர் மட்டும்தான் பதவியேற்றார். அனைத்து துறைகளுமே அவர் வசம் இருந்தன. இந்திய வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. நடத்திக் காட்டிய ஒரே மனிதர் எம்.ஜி.ஆர். பதவியேற்றதும் தலைமை செயலகத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆர்.
முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். புலனாய்வு மற்றும் உளவுத்துறை டிஜிபியாக மோகன்தாஸ் நியமனம். சுற்றி இருந்த அத்தனை பேருமே அதிர்ச்சியில் உறைந்தனர். பழைய எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து விட்டார் என்பதற்கு அந்த உத்தரவுதான் பொருத்தமான சாட்சியாக இருந்தது. சில நாட்களுக்கு பிறகுதான் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன், கே.ஏ. கிருஷ்ணசாமி, வரகூர் அருணாசலம், வி.வி.சாமிநாதன் உட்பட சிலர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

 

எம்.ஜி.ஆர். பதவியேற்ற 3வது மாதம் ஜுனியர் விகடன் இதழில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியானது. ஆண்டிப்பட்டி முதலமைச்சர் தொகுதி என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரை மாநில அமைச்சர்களின் ரத்தக்கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது. சாதாரண குக்கிராமத்தைக் காட்டிலும் மோசமான நிலையில் முதல்வரின் ஆண்டிபட்டி தொகுதி இருக்கிறது என்பதுதான் அக்கட்டுரையின் சாராம்சம். உள்ளாட்சித்துறை அமைச்சர் ப.உ.சண்முகம், மின்னல் வேகத்தில் ஆண்டிபட்டிக்கு விரைந்தார். ஆய்வுகள் செய்தார். ஜுனியர் விகடன் பொய்சொல்லுவதாக அமைச்சரிடம் இருந்து அறிக்கை வெளியானது. கட்டுரைக்கு நீண்ட தலைப்பு தரப்பட்டிருந்தது.

 

Half page

தொண்டர்களின் உற்சாகம் குறைந்துவிடுமோ என்று பயந்தார் எம்.ஜி.ஆர். கட்சிக்கு எல்லாமே தொண்டர்கள் தான். அவர்கள் இல்லையென்றால் கட்சி இல்லை என்பதால் தொண்டர்களை உற்சாகப்படுத்த விரும்பினார்.
இதற்காக தன்னுடைய ரசிக மன்றங்களை புதிப்பிக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். எதிர்பார்த்தபடியே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஒவ்வொரு ஊருக்கும் எம்.ஜி.ஆர். நேரில் வந்து ரசிகர்களை சந்திக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்தது.

 

ஆனால் எம்.ஜி.ஆரோ ரசிக மன்ற மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். மாநாட்டு வேலைகளை யாரிடம் ஒப்படைக்கப்போகிறார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். தேர்வு செய்த நபர், சாட்சாத் ஜெயலலிதாதான்.
உடனே ரசிகர் மன்ற மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னது ஜெயலலிதாவுக்கு உற்சாகமூட்டியது. இந்த மாநாடு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது என்று ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினர்.

14.07.1985 அன்று எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் கூட்டப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்தது. கூட்டம் கலைகட்டுமா? என்ற சந்தேகம் எம்.ஜி.ஆருக்கே லேசாக வந்திருந்தது.
ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அவர்கள் முகத்தில் தென்பட்ட எழுச்சியும் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டு மேடையில்தான் ரசிகர்கள் சார்பாக ஆறடி உயர வெள்ளி செங்கோலை ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். மிகப்பெரிய மாநாட்டை கூட்டி அதை வெற்றிகரமாக நடத்திய ஜெயலலிதாவுக்கு அந்த செங்கோலையே பரிசாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.

அடுத்து நடந்த மாற்றங்கள் அனைத்துமே ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்தன. 6 செப்டம்பர் 1985 அன்று கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் மீண்டும் ஜெயலலிதா நியமிக்கப்பட்டார்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.