அடக்கு முறை எண் கொண்ட இந்திராகாந்தி

0
gif 1

எண் 6

இதற்கு முன் வந்த தொடர்களிலேயே எண் 6யைப்பற்றிய பலன்களையும், அவர்களின் ஆளுமை, கற்பனைத்திறன், சுறுசுறுப்பு, புத்தி கூர்மை போன்றவற்றை அவ்வப்போது தெரிந்து கொண்டோம். இந்த தொடரில் அதன் முழு சிறப்பையும் காண்போம்.

 

எண் 6 சுக்கிரனை குறிக்கும். அசுர்ருக்கு குருவான சுக்கிரன் அனைத்து இன்பங்களுக்கும் காரணமான அழகன். இறந்தவரை உயிர்பிக்கும் சிரஞ்சீவி மந்திரத்தை கற்றவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்த மகாபலி மன்னனை மாறுவேடம் இட்டு சிறுவனாக சென்ற கிருஷ்ணர் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலி சரி என்று சொன்னார். கிருஷ்ணன் ஆகாயத்தையும் பூமியையும் தன் பாதத்தால் அளந்தார். மூன்றாம் அடி கேட்கும் பொழுது மகாபலி தன் தலையை காண்பித்தார். அவர் தலைமேல் கால்பதித்து மகாபலியை பாதாளத்தில் அமுக்கினார்.

gif 3

பொதுவாக தானம் தரும்பொழுது கமண்டலத்தில் நீரூற்றி தாரை வார்ப்பார்கள். வந்திருக்கும் சிறுவன், கிருஷ்ண பகவான் என்பதை தெரிந்த சுக்கிராச்சாரியார் வண்டாக உருவெடுத்து கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார். இதை பார்த்த கிருஷ்ணர் தர்பைப் புல்லால் சுக்கிராச்சாரியாரின் ஒரு கண்ணை குத்தி குருடாக்கினார்.

இதனால் சுக்கிரன் ஒற்றை கண்ணன் ஆகினார். பின்பு தான் மகாபலியை கிருஷ்ணர் பாதத்தால் பாதாளத்திற்கு அனுப்பினார்.
ஒருவர் கொடுக்கும் தானத்தை தடுத்ததால், சுக்கிரனின் கண்ணை பறித்தார் கிருஷ்ணன்.

குரு சொல்லை (சுக்கிராச்சாரியார்) கேட்காத மகாபலியை பாதாளத்திற்கு அனுப்பினார். சுக்கிரன் வளம் மிக்கவர். கடவுளாக இருந்தாலும் எதிர்க்கும் குணம் உண்டு. சுக்கிரன் ஐம்பலனுக்கும் சொந்தக்காரர். ஆய கலை 64ல் பெரும்பாலான கலைகளை கற்றவர் இவர்.

இவர் ஐம்புலனுக்கும் சொந்தக்காரராக இருப்பதால் கலாரசனை மிக்கவர். இவ்வெண்காரர்கள் அழகான சிற்பம், கோயில், கலை, பழங்கால நாகரிகம் கண்டுபிடிப்பாளர்கள். ஆடை ஆபரணங்கள் செய்தல், விற்பனை செய்தல், அணிதல் என இருப்பார்கள். இவர்கள் ஆடம்பரப்பிரியர்கள். அதேபோல், இல்வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களும் 6 எண் காரர்களே. எண் 6 காரர்கள் அடுத்த வரை வேலை வாங்கி அதன் மூலம் முன்னேறுவார்கள். இவர்கள் வயது ஏற ஏற செல்வச் செழிப்பும் பெருகும். ஆண் என்றால் பெண்கள் மூலமாகவும் பெண் என்றால் ஆண்கள் மூலமாகவும் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக, இவர்களுக்கு துணை வந்த பின் தான் முன்னேற்றம் இருக்கும்.

gif 4

இவர்கள் தண்ணி ராசிக்காரர்கள். பிடிவாதம் பிடித்தால் எந்த காரியத்தை செய்து முடிக்காமல் தூங்க மாட்டார்கள். அடக்கு முறையை கையாளும் குணம் கொண்டர்கள். புகழ்ச்சிக்கு மயங்குபவர்.

இவ்வெண்காரர்கள் இளமையில் காதல் திருமணம் செய்வர் அல்லது நீண்ட வயதிற்கு பிறகு திருமணம் நடக்கும் அல்லது திருமணம் ஆகாமலேயே வாழ்வார்கள். பேச்சால் அனைவரையும் வசியம் செய்யும் இவர்களுக்கு, யாரேனும் உதவிய வண்ணமே இருப்பர். பொதுவாக, 6ம் எண்காரர்கள் கண் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது.
இந்திராகாந்தி (INDIRA GANDHI = 1+5+4+1+2+1+3+1+5+4+5+1 = 33 = 3+3 = 6)
பெயர் எண் 6

இந்திராபிரியதர்ஷனி என்ற பெண்மணி திருமணத்திற்குப்பின் இந்திராகாந்தியானவுடன் அடக்குமுறைக்கு சொந்தக்காரராக மாறினார். ராணுவம் மற்றும் காவல்துறையை இவ்வெண் கட்டுப்படுத்த வல்லது. அதனால் தான் எமர்ஜென்சி என்ற அடக்குமுறையை கொண்டு வந்தார். அணுகுண்டை பூமிக்குள் வெடிக்கச் செய்தார். தனது ஆட்சி காலத்தில் தனக்கு தொல்லையாக தெரிந்த மேற்கு கிழக்கு பாகிஸ்தானை போர் செய்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கினார். இந்திராகாந்தி பெயர் எண் 6 அசுரர்கள் குரு. அதனால்தான் குருஸ்தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளைக் கொன்று பொற்கோவிலை ரத்தக்களரி ஆக்கினார்.

 

பிறந்த தேதி மற்றம் அவற்றின் கூட்டு (DOB 19-11-1917 = 1+9+1+1+1+9+1+7=30=3)
1 மற்றும் 3
எண் ஒன்று இவரை அரசியலில் உச்சப்பதவியை அடையச் செய்தது. இவ்வெண்காரர்கள் பதவிக்கு வருபவர்களை தள்ளிவிட்டோ அல்லது மரணம் அடையச் செய்தோ அந்த பதவிக்கு வர முடியும். இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்தின் பின்னால் பிரதமர் பதவி வகித்தார்.
ஒருவரின் பிறந்த தேதியிலோ அல்லது பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்டும் எண்ணோ அல்லது பெயரின் எண்ணோ எண் 1 வந்தால் அவரின் துணைவி, துணைவர்களுக்கு தேதி எண்ணோ அல்லது கூட்டு எண்ணோ அல்லது பெயரின் எண்ணோ 3 , 5, 6-ல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் துணையை விலக்கியோ அல்லது மரணம் அடையவோ செய்யும். இதன் விளைவாக இந்திராகாந்தி சிறுவயதில் கணவரை இழந்தார்.

பிறந்த தேதி கூட்டு எண் 3

இந்தியாவை ஆள வேண்டும் என்றால் எண் 3ம் 8ம் இருக்க வேண்டும். இது இந்தியாவுக்கு ராசியான எண். தமிழகத்திற்கு எதிர் எண். தமிழகத்தின் கூட்டு எண் 2. எண் 2க்கு 3, 9 ஆகிய எண்கள் எதிர் எண்கள்.
ஆனால் அன்னை இந்திராகாந்தியின் பிறந்த தேதியின் கூட்டு எண் 3. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியின் பிறந்த தேதி 3 இவர்கள் காலத்தில் தான் தமிழகத்தின் காவேரி மறு ஒப்பந்தம் நீர்த்துப் போனது. கட்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்ப்பு போன்ற தமிழகத்திற்கு எதிரான சம்பவங்கள் நடந்தன.

மேலும், உதாரணங்களை
அடுத்த வாரம் பார்ப்போம்…

gif 2

Leave A Reply

Your email address will not be published.