உலகத் திருக்குறள் மாநாடு துவங்கியது

0
1

உலகத் திருக்குறள் மாநாடு துவங்கியது

உலகின் பல நாடுகளிலிருந்தும் மலேசிய நாட்டிலிருந்தும் 500க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்ட உலகத் திருக்குறள் மாநாடு கோலாலம்பூரில் பிப்ரவரி 22 துவங்கியது.

2

மலாயா பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல் துறை, உலக தமிழ் அமைப்புகளுடன் இணைந்து உலக திருக்குறள் மாநாட்டை ஏற்பாடு செய்தனர்.

4

ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் துவங்கிய மாநாட்டில் தென்காசி க. மாடசாமி மற்றும்
கப்பலோட்டிய தமிழன் வா.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் கொள்ளுப்பேரன் முத்துகுமரசாமி திருக்குறளின் சில அம்சங்களை சுட்டிக்காட்டி பேசினார்கள்.

 

 

இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர் மன்னர் மன்னன் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.
நிகழ்சியின் மலேசிய நாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ந.கு.முல்லைச் செல்வன் பேராளர்களை வரவேற்றார். சிங்கப்பூர், சீனா, இந்தியா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா நாடுகளோடு மலேசிய நாட்டு பேராளர்களும் கலந்து கொண்டனர்.

 

மக்கள் நீதி கட்சியின் தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மாநாட்டின் திறப்பு விழா துவங்கியது.

3

Leave A Reply

Your email address will not be published.