ஓவியத்தில் அசத்தும் திருச்சி கல்லூரி மாணவி

0
Business trichy

இன்றைய அறிவியல் யுகத்தில், நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில், திருச்சி,

ஜமால் முகமது கல்லூரியைச் சேர்ந்த பிரியாதர்ஷினி என்ற மாணவி, ஓவியம் வரைதலில் தன்னுடைய கவனத்தை செலுத்தி அசத்திக்கொண்டிருக்கிறார். ஓவியம் வரைந்து விற்பனை செய்து அதன் மூலம் தன்னுடைய படிப்புக்கான பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்.

MDMK

திருச்சி அரியமங்கலம் முத்துபிள்ளை தெருவில் வசிக்கும் பிரியாதர்ஷினி. பள்ளி படிக்கும் காலம் முதலே பொழுதுபோக்குகாக ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார். இதற்காக, எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லதா இவர், தன்னுடைய சுய ஆர்வத்தின் மூலமாக இன்று சுயம்பாக நின்று ஓவியத்தில் அசத்தி வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பின் இவரின் திறமையை கண்ட பேராசிரியர். ஊக்கப்படுத்த முதலில் இவரின் வண்ண ஓவியங்களை வாங்கி தான் புதிதாக கட்டிய இல்லத்தை அலங்கரிக்க பயன்படுத்தியுள்ளார். அந்த ஓவியங்களை கண்டவர்களின்  மனம் கவரவே தொடர்ந்து வரைந்து தரும்படி கேட்டுள்ளார் ஆசிரியர். இதில், நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஆர்வத்துடன் வரையத்தொடங்கிள்ளார்.

Kavi furniture

தனது குடும்பத்தினருடன் பிரியதர்ஷினி (படம் வைத்திருப்பவர்)

இது குறித்து கல்லூரி மாணவி ஓவியர் பிரியாதர்ஷினி கூறுகையில், பள்ளிப்படிக்கும் போது அங்கு நடைபெறும் ஓவியப்போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளேன். இந்த பரிசுகள் என்னை தொடர்ந்து ஓவியம் வரைய தூண்டியது, ஆனால், எங்கு சென்று பயிற்சி எடுப்பது என்று தெரியாமல் சுயமாகவே வரையத்தொடங்கினேன். கல்லூரி சேர்ந்த பிறகு, ஆசிரியர் எனக்கு உதவினார். ஓவியத்தை விற்பனை செய்யவும் ஆரம்பித்தேன். பலர் புகைப்படம் கொடுத்து வரைந்து தரும் படியும் கேட்பார்கள். இதன் மூலம் எனக்கான பணத்தேவையும் என்னால் நிவர்த்தி செய்து கொள்ளமுடிகிறது. இருப்பினும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.