மௌண்ட்சீயோன் சர்வதேசபள்ளியில் மாணவர்களுக்குபரிசளிப்புவிழா

0
Business trichy

புதுக்கோட்டைலேணாவிளக்கில் அமைந்துள்ளமௌண்ட்சீயோன் சர்வதேசபள்ளியில் கல்விமற்றும் திறமைகளை வெளிக்கொணர பள்ளியில் நடைபெற்றபோட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றமாணவ,மாணவியர்களுக்கு பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வானது பிப்ரவரி 20ம் தேதி மிகசிறப்பாக நடைபெற்றது. இந்தவிழாவிற்கு புதுக்கோட்டைமாவட்டபோதைதடுப்பு சிறப்புநீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லிகிறிஸ்டோபர் சிறப்புவிருந்தினராகவருகைதந்தார்.

 

சிறப்புவிருந்தினரைபள்ளியின் இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் மாணவர்களிடம் அறிமுகப்படுத்திவரவேற்புரைநிகழ்த்தினார்.  தொடர்ந்துமழலையர் பிரிவுமுதல் பனிரெண்டாம் வகுப்புவரைபோட்டிகளில் வெற்றிபெற்ற 362 மாணவ,மாணவியர்களுக்குபதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

MDMK

சிறப்புவிருந்தினர் தனதுசிறப்புரையில் பள்ளியில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதைமாணவர்கள் பயன்படுத்திதங்களதுவெற்றி இலக்கைநோக்கிபயணிக்கவேண்டும். அதிலும் மாணவர்கள் பங்கேற்பு என்பது மிகஅவசியமானது காரணம் இன்றையபங்கேற்பாளன் நாளையவெற்றியாளன்.மேலும் வெற்றிபெற்றவர்களைவிடபோட்டிகளில் பங்கேற்றமாணவர்களே முதல் பாராட்டுக்குஉரியவர்கள்.மாணவர்கள் எந்த இலக்கைஅடையவேண்டும் என்பதைமுதலில் தெளிவுபடுத்திகொண்டுஅதைஅடையபள்ளியின் ஆசிரியர்கள் துணைகொண்டுமுயற்ச்சிக்கவேண்டும் என்று கூறிமாணவர்களைஉற்சாகப்படுத்திபேசினார்.

Kavi furniture

பள்ளியின் இணை இயக்குநர்ஏஞ்சலின் ஜோனத்தன் வெற்றிபெற்றமாணவ,மாணவியர்களுக்குதனதுவாழ்த்துக்களைதெரிவித்தார். வுpழாவின் இறுதியில் பள்ளிமுதல்வர் டாக்டர். ஜலஜாகுமாரிநன்றியுரை வழங்கினார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.