தகராறை தட்டிக்கேட்ட திருச்சி போலீஸ் மீது  கத்தி குத்து !

0
Full Page

தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் மீது  கத்தி குத்து !

 

ஸ்ரீரங்கம் காவல் நிலையம் எதிரே ராகவேந்திரா ஆர்ச் உள்ளது. இந்த ஆர்ச் அருகில்  இரவு 3 பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்ரீரங்கம் ஏட்டு ஜான் மீரான் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

Half page

அப்போது ஏட்டுவிற்கும், 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 3 பேரில் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏட்டு கையில் கிழித்தான். இதில் ஏட்டுவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.  அவர் கூச்சல் போட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 3 பேரும் போதையில் இருந்ததையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

சமீபமாக திருச்சியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு ஏட்டு மீது ரவுடிளே கத்து குத்து நடத்திய சம்பவம் போலிசார் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.