கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு 47 ஆண்டு கால ரகசியம்

0
1

கருணாநிதி பற்றிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் முதல் அவரைப் பற்றிய நெகிழ்வான சம்பவங்கள், அவருடன் பகிர்ந்துகொண்ட மறக்க முடியாத நினைவலைகள் எனப் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்

கருணாநிதி என்றாலே, மஞ்சள் துண்டு கருப்பு கண்ணாடி தெளிந்த பேச்சு இவைகள்தான் திமுக தலைவர் கலைஞரின் அடையாளம்.
தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை யில் வெற்றி நடைப் போட்டு பயணித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவருடைய தனிப் பட்ட அடையாளமாக மாறி போனது தான் அவர் அணியும் கருப்பு கண்ணாடி 1972-ஆம் ஆண்டிலி ருந்துதான் இவர் கருப்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தார்.

4

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையான ஜான் ஹிப்கின்ஸ் என்ற மருத்துவமனையில் கலைஞருக்கு கண் பரிசோதனை செய்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரை கண்ணாடி அணிய செய்தனர்.

2

அப்போது அணிய ஆரம்பித்த அந்த கருப்பு கண்ணாடியை 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றி விட்டார். கருப்பு கண்ணாடி கூடுதலான எடை கொண்டதால் அவரது கண்ணில் அழுத்தம் உண்டு செய்து வலியை ஏற்படுத்துகிறது என கூறி அந்த கண்ணாடியை மாற்றப்பட்டு, வேறு கண்ணாடியை அணிய தொடங்கினார்.

புதிய கண்ணாடியை விஜயா ஆப்டிகல்ஸ் மூலம், 40 நாட்கள் ஆலோசனைக்கு பிறகு, கலைஞருக்கு ஏற்ற கண்ணாடியை ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் அவர் அணியும் கண்ணாடி பிரேம் கருப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது

3

Leave A Reply

Your email address will not be published.