வருகின்ற 22.02.2019 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.02.2019 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கப்படவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த பட்சம் 35 வயதிற்குள் 8-ம் வகுப்பு 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ முடித்த உடல் மற்றும் செவித்திறன் சவாலுடைய  மாற்றுத்திறனாளிகளும்; மற்றும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு Any Degree, M.B.A., b.e., & B.Tech படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

web designer

மேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (TC,   Marksheet,  Ration card, Adhar Card) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

loan point

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சியில் நேரில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுதெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.