ஒருபுறம் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஏன் இப்படி நடக்கிறது?

0
D1

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருக்கும் இதே வேளையில் தொடர்ந்து தமிழகத்தில்பெண் குற்றவாளிகள் அதிகரித்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக அண்மையில் சிறைக்கு சென்ற அபிராமி வழக்கு, தனது பாசமிகு சொந்த குழந்தைகளையே கள்ளகாதலுக்காக கொல்லும் அளவிற்கு ஒரு பெண் துணிந்துள்ளாள் என்பது வருத்தபடவேண்டிய நிலை மட்டும் இல்லாது, என்ன காரணத்தினால் பெண்கள் இவ்வாறாக மாறுகின்றனர், எது அவர்களை இது போன்ற செயல்களை செய்ய ஊக்குவிக்கிறது. இதனை தடுக்க என்ன வழி என்பதை நாம் தொலைநோக்கு பார்வையுடன் யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

N2

பெண் குற்றவாளிகள் அதிகரிக்க காரணம் என்ன? இதனை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும். இது குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்

D2

மனநல மருத்துவர் ராஜாராம் –
(ஆத்மா மனநல மருத்துவமனை திருச்சி)
இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு சூழ்நிலைகள் மாற்றம் ஒரு காரணம். பெண்கள் தற்போது ஆண்களுக்கு இணையாக வேலைக்கு போறாங்க, குடும்பத்தை மொத்தமாக அந்த பெண் சுமக்கிறாள். அதனால் பெண் சம உரிமை எதிர்பார்க்கிறாள். இந்த சூழலில் பெண் ஆண்களுடன் தோழமையாக பழகும் போது அதை அந்த ஆண் தவறாக பயன்படுத்த நினைத்து அவளை கட்டாயத்துக்கு உட்படுத்துதலும் இது போன்ற கொலை சம்பவங்களுக்கு காரணம். செக்ஸ் எஜுக்கேஷன் இல்லாம வளர்க்கப்படறது, குட் டச், பேட் டச் பத்தி பேசப்படாதது, சின்ன வயசில் இருந்து உணர்வுகளை அடக்கி பழக்கப்படுத்துறது இவையெல்லாமும் ஒரு காரணம். இப்போது இன்டர்னட்டை குழந்தைகள், மாணவர்கள் அதிகமாக உபயோகிக்கின்றனர். இது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கேடு விளைவிக்கும். மொபைல் போன் அதிகப்படியாக உபயோகிப்பதனால் தூக்கம் கெடுகிறது. குறைந்தபட்சம் 6-8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் இல்லாமை இவையெல்லாம் மனதை சிதறடிக்கக்கூடியவை.
சுந்தரவள்ளி (சிபிஎம்)-
பெண்ணுக்கான பாலியல் வெளியை பேசுவதற்கு இன்னும் இந்த சமூகம் பழக்கப் படுத்தப்படவில்லை. பெண்ணிற்கு தேவையான பாலியல் சார்ந்த உரையாடலை நிகழ்த்துவதற்கான இடத்தை அந்த கணவன் உருவாக்கித் தர வேண்டும். ஒரு கணவன் – மனைவிக்குள் இருக்கும் விரிசலுக்குக்கான வேரில் மருந்து செலுத்தினால் இன்று இந்த அபிராமி வழக்கில் கொலைக்கு கொண்டுபோய் விட வாய்ப்பில்லை. கணவன் – மனைவி இடைவெளி, புரிதல் அற்ற தன்மை, அறிவு சார் விஷயங்களில் சமமற்ற தன்மை இவையெல்லாம் பேசப்படாமலே போனதுதான் இந்த கொலைக்கு காரணம். எங்களுக்கு உட்கார்ந்து பேச நேரமில்லை என சொல்லும் நிலையின் விளைவுதான் இந்த கொலை.
அல்லிராணி பாலாஜி (யுகா அமைப்பு) –
எத்தனையோ அபிராமிகள் இது போல் உள்ளனர். ஆனால் குறைவாகத்தான் இது போன்ற விஷயங்கள் வெளிப்படுது. இது மனதிற்குள் நடக்கிற உணர்வு. அன்பு, காதல், தோழமை, நம்பிக்கை இவையெல்லாம் வறண்டு போகிற நேரத்தில் இது போன்ற உணர்ச்சிகளை தேடுகின்றனர். ஆண், பெண் என இல்லாமல் இது மொத்தமாக சமூக அழுத்தமாக நான் பார்க்கிறேன். எதிர்பார்ப்புகளின் ஏமாற்றங்கள் ஒரு சமயத்தில் வெறுப்பாக மாறி வெடிச்சு இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. எப்போது மெட்டீரியல்சுக்கு கொடுக்கிற மரியாதை மனிதர்களுக்கு கிடைக்காம மாறிப்போனதோ அப்போதிலிருந்து தான் இந்த விளைவு. ஒவ்வொரு வீட்டிலும் நாம் மாற்றத்தை கொண்டு வரனும் , மனிதநேயம் வளர்க்கனும். ஷோசியல் மீடியாக்களை நல்ல முறையில் உபயோக்கினும், அபிராமி இதை தவறாக பயன்படுத்தியதும் ஒரு காரணம். இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி.
தமிழ் (ஹெச்.ஐ.வி கூட்டமைப்பு தலைவர்)
எல்லாமே குறையாக பெண்களை சொல்லிட்டு இருக்கோம், அபிராமியை குற்றவாளியாக தப்பானவராக காட்டிய இந்த சமூகம், அவருக்கு சோசியல் மீடியா அதிக அளவில் பெண்கள் கையில் கிடைக்கும் கள்ளகாதலனாய் இருந்தவரின் புகைப்படம் அந்த அளவிற்கு பரப்பப்படவில்லை. பெண்களுக்கு கொடுக்கபட்ட சுதந்திரம் ரேசன் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறது பெண்கள் இது தொடர்பாக அதிகப்படியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஒரு பெண் நடுநசியில் ஆன்லைனில் இருந்தாலே அவளின் குணத்தை தவறாக சித்தரிக்கிற, தவறாக எடுத்துக்கொள்கிற மனநிலை ஆண்கள் மத்தியில் இருக்கிறது. காலங்காலமாகவே பெண்களை குறைசொல்லும் சமூகமாக இருப்பதால் இன்று பெண்களுடைய பிரச்சனைகளை அதிகம் வெளிக்கொண்டுவந்து அது பற்றி பேசப்படுகிறது. அதற்கு மூலக்காரணமாய் இருப்பது ஆண்கள் என்பது தான் என்னுடைய கருத்து.

N3

Leave A Reply

Your email address will not be published.