“ஷாமா பாமா” இது முற்றிலும் கற்பனை கதாபாத்திரமே.

0
1

திருச்சி புத்தூர் அக்ரகாரத்தை சேர்ந்தவர் ஷ்யாம் சுந்தர்(65) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரின் மனைவி பாமா சுந்தரி (60) குடும்பத் தலைவி. இவர்களின் சுருக்கப் பெயரே “ஷாமா பாமா” இருவரும் சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், அரசியல், சினிமா, என எல்லாவற்றையும் விவாதிப்பார்கள், பேசுவார்கள், நாமும் இவர்களுடன் சேர்ந்து இன்று முதல் பயணிப்போம். இது முற்றிலும் கற்பனை கதாபாத்திரமே.

4

ஷாமாவும், பாமாவும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்தியபேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்கள்…

ஷாமா: பாமா…பாமா… அந்த டிரைவர் சீட்டுக்கு பின்னாடி மேலே என்னது உருண்டையா?
பாமா: ஓ…அதுவா அதுதான் சிசிடிவி (cctv) கேமரா. இந்த ரகசிய கேமரான்னு சொல்லுவாளே…
ஷாமா: அதை எதுக்கு பஸ்ல வச்சிருக்கா? ஏதாவது அசம்பாவிதம் நடக்கிற மாதிரி இருக்கிற இடத்தில தானே வைக்கணும்?
பாமா: இங்க மட்டும் என்ன பிக்பாக்கெட் அடிக்கிறது, நகைகள் திருடுவது, ரெண்டு மாசம் முன்னாடி சென்னைல டவுன் பஸ்ல ஒரு கொலையே நடந்ததே உங்களுக்கு தெரியாதா? அதுக்குதான் பஸ்ல சிசிடிவி கேமரா வச்சிருக்கா…
ஷாமா: அது சரி இந்த சிசிடிவி கேமரா ரொம்ப முக்கியமானது தான். ஆனா எங்க பயன்படுத்தனுமோ அங்க பயன்படுத்தணும். ரயில்வே ஸ்டேஷன், பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், கோவில்கள், இந்த மாதிரி இடத்துல வைக்கலாம்.
பாமா: ஏன் பஸ்ல வைக்க கூடாது?
ஷாமா: காரணம் இருக்குடி… பஸ்ல லேடிஸ் ஏறுவா… கையை மேலே தூக்கி கம்பியை பிடிச்சுக்கிட்டு வருவா… அது அப்படியே ஆபாசமா சிசிடிவியில் பதிவாகும். இது பத்தி யோசிக்க வேண்டாமா?
பாமா: ஆமாண்ணா… இத பத்தி நான் யோசிக்கவே இல்லையே…
ஷாமா: ம்ம்ம்… எங்கே சிசிடிவி கேமரா வைக்கணுமோ அங்க வைக்கிறதில்லை… கண்ட கண்ட… இடத்துல சிசிடிவி கேமரா. துணி வாங்கும் இடத்துல ட்ரெய்லர் ரூம்ல கேமரா, பப்ளிக் டாய்லெட் வாசல்ல கேமரா, உள்ளார இருக்கான்னு தெரியல… லேடிஸ் ஹாஸ்டல்ல கேமரா, இப்போ பஸ்ல… இன்னும் எத்தனை இடத்துல ஒழுங்கா சிசிடிவி கேமரா இருக்கு? பேருக்குதான் சிசிடிவி கேமரா ஒர்க் ஆகுதா னு தெரியலை…
பாமா: அப்போ பஸ்ஸில நடக்கிற அசம்பாவிதத்தை தடுக்க சிசிடிவி கேமரா வேண்டாமா?
ஷாமா: பஸ்ஸில நடக்குற அசம்பாவிதத்தை தடுக்க வேற ஏதாவது உத்திகளைக் கையாளலாம். மக்களுக்கு எது பாதகமோ அதை அறவே கூடாது என்பது என் பாலிசி. நிச்சயமா பஸ்ல இருக்குற சிசிடிவி கேமராவால பெண்களுக்கு பாதிப்பு அதிகம். மாமா… நம்ம ஸ்டாப் வந்துடுத்து இறங்கு… இறங்கு…

3

Leave A Reply

Your email address will not be published.