திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கு (TABCEDCO) திட்டங்கள்

0
1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEDCO) கடன் திட்டத்தினை சிறப்புற செயல்படுத்திடவும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEDCO) திட்டங்கள் மூலம் கடன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு. தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களான  சிறுகுறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு,மின்மோட்டார், பம்புகள் மற்றும் இதர உபகரணங்கள் பொருத்துதல், குழாய் தொடரமைப்பு அமைத்தல், சொட்டு  நீர்;ப்பாசன கடன்திட்டத்திற்கு ரூ.1,00,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடன் தொகையில் 50 விழுக்காடு வரை அதிகபட்சம் ரூ.50,000/-அரசு மானியம் பின்நிகழ்வாக வழங்கப்படும். பொது கால கடன் திட்டம் / தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6மூ. பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் ரூ.1,00,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5%. கறவைமாடுகள் வாங்க ரூ.60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%. போக்குவரத்து இனங்களுக்கான காலக் கடன் மூலம் வாகனங்கள் வாங்கிட ரூ.3,13,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 10%. சுயஉதவி குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.50,000/- என அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கல்விக் கடன் 1% வட்டி விகித்தில் வழங்கப்படுகிறது.

4

இத்திட்டங்கள்  லம் கடன் உதவி பெற தகுதிகளாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும், திட்ட அலுவலர்(மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2

தகுதியுடைய நபர்கள் கடன் உதவி பெற கோரும் விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும்  அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மேற்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களானது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படை செய்யப்படல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் தேர்வு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு கடன் பெறுவோர் தேர்வு செய்யப்படுவர் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.