முதல்வராக போனார்… முதல்வராகவே வந்தார்…

0
Business trichy

அ.இ.அ.தி.மு.க. முகாமில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அதே உற்சாகத்துடன் அ.இ.அ.தி.மு.க.வின் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆளுங்கட்சியின் தலைவர்தான் அடுத்த முதல்வர். பதவியேற்பு விழாவை எப்போது வைத்துக்கொள்ளலாம். இதுதான் அடுத்த எழுந்த கேள்வி.

 

நெடுஞ்செழியனும், தலைமைச் செயலாளர் சொக்கலிங்கமும் அமெரிக்கா சென்றனர். சில தினங்களில் சென்னை திரும்பினார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இன்னும் ஓரிரு வாரங்களில் சென்னை திரும்பி விடுவார். அதன்பிறகே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார். அதுவரை தேர்தலுக்கு முந்தைய ஏற்பாடுகளே தொடரும். இதுதான் எம்.ஜி.ஆர். சொன்ன செய்தி என்றார்கள். ஆளுநர் குரானாவிற்கு திருப்தி இல்லை. எத்தனை நாளில் எம்.ஜி.ஆர். வருவார் என்று கேட்டார். பிப்ரவரியில் வந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஆளுநரோ அரசியல் அமைப்பு சட்டத்தில் அதற்கெல்லாம் உரிமை இல்லை. சிக்கல் வந்துவிடும் என்றார்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார் ஆளுநர்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பதவியேற்கும் அளவிற்கு உடல் தகுதி பெற்றுவிட்டார் என்று ப்ரூக்ளின் மருத்துவரிடம் சான்று வாங்கி வாருங்கள் என்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ பின்வாங்கியது. உடல் நிலை முன்னேற்றத்தில் இருக்கிறது. ஆனால் முதலமைச்சராக செயல்படுவதற்கு பலம்பெற்றுவிட்டார் என்று எழுத்து மூலம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எம்.ஜி.ஆர். நலமுடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க மீண்டும் வீடியோ படங்கள் எடுக்கப்பட்டன. அதைப் பார்த்த பிறகும் ஆளுநர் குரானாவிற்கு திருப்தி ஏற்படவில்லை. பேசமுடியாத, முழுமையாக செயல்பட முடியாத ஒருவரை நான் எப்படி முதலமைச்சராக நியமிக்க முடியும் என்று கேட்டார் குரானா? பலத்த முயற்சிகளுக்கு பிறகு பிப்.4, 1985 அன்று எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

 

Image
Rashinee album

தமிழகமே விழாக்கோலம் பூண்டது. பரங்கிமலை ராணுவ மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டது. விமான நிலையத்தில் வந்திறங்கினார் எம்.ஜி.ஆர். தயாராக இருந்தது அவருடைய 4777 அம்பாசிடர் கார். எம்.ஜி.ஆரின் கார் பரங்கிமலை மைதானத்திற்கு வந்தபோது காலை மணி 6. ஆனாலும் ஜனத்திரள் கட்டுக்கடங்காது இருந்தது. அணையை உடைத்துக்கொண்டு வெள்ளம் வருவதுபோல் மக்கள் வெள்ளம் பரங்கிமலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆரின் கார் நேராக மேடைக்கே சென்றது. கதவு திறந்தது. பொன்மனச்செம்மல் இறங்கினார்.

 

அடுத்தபடி பலத்த கரவொலி, வாழ்த்து கோஷங்கள். கைகளை ஆட்டினார் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் கூட்டம் திமிறத் தொடங்கிவிட்டது. பிறகு ராமாவரம் தோட்டத்திற்கு புறப்பட்டார் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில் ஆளுநர் குரானா ராமாவரம் தோட்டத்திற்கு வந்து எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து பேசினார். வெளியே வந்தவர். HE IS ALL RIGHT, BOTH MENTALLY AND PHYSICALLY HE IS ALLRIGHT என்றார்.

தொடரும்…

Ukr

Leave A Reply

Your email address will not be published.