பிஜேபி கூட்டை கலைக்கும் தினகரன்

0
D1

“ ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருக்கிறார் டிடிவி. தினகரன். மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் என்ற பெயரில் ஊர் ஊராக சுற்றி வருகிறார். சொல்லப்போனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்றே சொல்லலாம். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்தைகளில் பிஸியாக இருக்க… தினகரனோ சுற்றுப்பயணத்தில் பிஸியாக இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் திட்டம்தான் என்ன? அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

 

‘பிஜேபியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வேண்டாம் என்பதில் டிடிவி உறுதியாக இருக்கிறார். பிஜேபியுடன் கூட்டணி சேர்வதும் ஒன்றுதான் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவுடன் இணைவதும் ஒன்றுதான் என அவர் நினைக்கிறார்.
பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் அத்துடன் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும் என்பதுதான் அவர் எண்ணம். அதனால் இப்போதைக்கு தனித்துப் போட்டியிட்டால், அது மக்களிடம் தனது செல்வாக்கை உயர்த்தும் என சொல்லி வருகிறார். தனி ஒருவனாக நிற்கும் போது, அது மக்களிடம் ஹீரோ இமேஜை கொடுக்கும். அந்த கணக்குப்படி பார்த்தால் எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டால் 10 முதல் 12 சீட் வரை அமமுக ஜெயிக்கும். ஆனால் கூட்டணி இல்லை என அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. திமுக, அதிமுக இல்லாமல் தினகரன் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எதுவும் இன்னும் முடிவாகிவிடவில்லை.

 

N2

இவ்வளவு நாளாக திமுகவுடன் கூட்டணி என சொல்லி வந்த சி.பி.எம். நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு நிலைப்பாடு எடுத்து பேசிய பிறகு திமுக கூட்டணியில் தொடர வேண்டுமா என சி.பி.எம். யோசிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் அவர்கள் விரைவில் வெளியே வருவார்கள். அவர்களுக்கான இடம் அமமுகதான். அதேபோல, பாமக ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறது. அவர்களது விருப்பம் திமுகவாகத்தான் இருக்கிறது. அப்படி பாமகவின் எண்ணம் பலித்து அவர்கள் திமுக பக்கம் வந்தால், அங்கே விடுதலை சிறுத்தைகளுக்கு வேலை இருக்காது.

 

D2

பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என தெளிவாக சொல்லிவிட்டார் திருமாவளவன். அதேபோல பாஜக கூட்டணிக்கும் அவர் போகமாட்டார். அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் அமமுகதான். அதே போல, முஸ்லீம் கட்சி ஒன்றில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாங்கள் நினைக்கும் மூன்று கட்சிகளும் கூட்டணிக்குள் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. அப்படி வந்துவிட்டால் நிச்சயம் 18ல் இருந்து 23 சீட் வரை எங்கள் கூட்டணி ஜெயிக்கும். அதனாலதான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்கள் துணைப் பொதுச் செயலாளர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். யாரும் இல்லை என்றாலும் 10 சீட் நாங்க ஜெயிப்பது உறுதி.’ என்று சொல்கிறார்கள் தினகரனுடன் நெருக்கமாக பேசுபவர்கள்.

 

இதுமட்டுமல்ல.., 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கிட்டதட்ட முடிவு செய்துவிட்டாராம் தினகரன். சிலரிடம் வெளிப்படையாகவே, ‘நீங்க போய் இந்த தொகுதியில் வேலையை கவனிங்க…’ என்று கூட சொல்லி அனுப்பியிருக்கிறார். பிஜேபியில் இருந்து பல வழிகளில் தினகரனுக்கு தூதுவிட்டும், சிலர் மூலமாக மிரட்டியும் பார்த்தார்கள். ஆனால் அவர் எதுக்கும் வளைந்து கொடுக்கவில்லை. இதனால் தினகரன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது பிஜேபி தரப்பு.”

N3

Leave A Reply

Your email address will not be published.