திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் பேச்சு

0

தமிழக கத்தோழிக்க ஆயர் பேரவையின் பட்டியலினத்தார் பணிக்குழுவும், தமிழக யேசு சபை தலித் பணிக்குழுவும் இணைந்து கோடை கால முகாமில் கலந்து கொண்ட தலித் கத்தோலிக்க கல்லூரி பயிலும் இளையோருக்கான பயிற்சிப் பாசறை 17.2.2019 ஞாயிறு அன்று தூய மரியன்னைப் பேராலய குளிர்மை அரங்கில் நடைபெற்றது. நிகழ்வினை மரியன்னைப் பேராலய அதிபர் அருள்பணி. சகாயராஜ் தொடங்கி வைத்துப் பேசினார். பட்டியலினத்தார் பணிக்குழு செயலர் அருள்பணி குழந்தை நாதன் நிகழ்வின் நோக்கும் போக்கும் குறித்து விளக்கினார். தூய வளனார் கல்லூரியின் தலித் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி வில்சன் வாழ்த்துரை வழங்கினார்.

தஞ்சை மறை மாவட்டதின் அருள்பணி தமிழ் தாசன் எவ்வாறு தலித் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி தான் சார்ந்த ஊரில் இளையோரை ஒருங்கிணைக்க ஊருக்குள் ஒருவன் என்ற திட்டத்தினை எவ்வாறு செயல்படுத்துவது குறித்து உரையாற்றினார். அம்பேத்கர் மற்றும் அம்பேத்காரியம் குறித்த தெளிவினை பயிற்ச்சியாளர்கள் திரு கருப்பையா மற்றும் செல்வி. தேன்மொழி ஆகியோர் வழங்கினர்.

பயிற்சியின் இறுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். சாதியமட்ற சமத்துவ சமூகம் உருவாக அண்ணல் அம்பத்தகர் வழியில் சென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று பங்கேற்பாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.

இறுதியாக பேராசிரியர் சுவக்கின் நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட இளையோரும், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

food

gif 4

Leave A Reply

Your email address will not be published.