இளம் ஆராய்ச்சியாளர்கள் விருது-என்ஐடி மாணவர்கள் சாதனை

0

NIT திருச்சி பேராசிரியரையும் அவரது PhD மாணவர்கள் அரவிந்த்  திவ்யா இருவரின் பயணச் செலவுகளை ஏற்று போலந்து பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒருவர் YOUNG  Researcher award பெற்றுள்ளார். இது உலகளவில் எட்டு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டது.

வாய்ப்பு பெற்ற ஒரே NIT குழுவாக இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பை வெளிடுவார்கள்

Planar Transmission Lines குறித்து இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த நவம்பர்  மாதம் நிகழ்ந்த ஆசியா பசிபிக் நுண்ணலை கருத்தரங்கத்தில்  (Asia Pacific Microwave Conference APMC’18) சிறப்பழைப்பிற்குப் பிறகு, NIT திருச்சியில் பேராசிரியர் திரு இராகவன் அவர்களும் அவரது மாணவர்கள் அரவிந்து குமாரும் திவ்யா சதுர்வேதியும், மகுடத்தில் சேர்க்க அடுத்த மணியாக மார்ச் மாதம் 31 முதல் ஏப்ரல் 3 வரை போலந்தில் (ஐரோப்பா) நிகழவிருக்கும் EuCAP மாநாட்டிற்கு அழைக்கப் பட்டுள்ளனர். மாநாட்டில்  மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்பை விளக்கியுரைக்க பேராசிரியர் “substrate integrated waveguide” பற்றி  சிறப்புரை ஆற்றுவார். இவ்வாராய்ச்சிக் குழு தற்போது நுண்ணலக் கருவிகளான ஆன்டெனா , வடிப்பிகளை   இராணுவ, விண்வெளி துறைகளில்  பயன்பாடுத்த ஆய்ந்து வருகின்றனர். இத்துறையில் கடந்தாண்டு இவர்கள் சாதித்தது ஏராளம். ஆறு மாதங்களில்  முப்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். அவர்களது ஆராய்ச்சியின் மேன்மையைக் கண்டு  Dept of Science and Technology

(DST) மற்றும்  Council of Scientific & Industrial Research (CSIR), ஆகியவை தானே முன்வந்து மாணவர்களின் பயணச்  செலவுகளை ஏற்றுள்ளனர். கடந்தாண்டு EuCAP மாநாடு லண்டனில் நடைப்பெற்றது. அதில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர் .

EuCAP 19 நுண்ணலைத் துறையின் (குறிப்பாக ஆன்டெனா )  மிகபெரிய உலக கருத்தரங்கம்  ஆகும். இதில் பல்வேறு பல்கலைக் கழக பேராசிரியர்களும்  தொழிற்சாலைகளின்  முதன்மை பொறியியலாளர்களும் கலந்து கொண்டு  நுண்ணலைப் பொறியியல் துறையில் நிகழும் முன்னேற்றங்கள் குறித்தும், ஆராய்ச்சி முடிவுகள் குறித்தும் கூடி வேலை செய்யும் வழிகள் குறித்தும்  உரையாடுவர் . மேலும் நுண்ணலைத் துறையின்  பயன்பாடுகளான நுண்ணலை மருத்துவ நிருவிகள், பல்கற்றை அன்டெனா மற்றும் கற்றை இணைப்புகள், டெரா அதிர்வெண் தொழில்நுட்பம், கருவி மயமாக்கல் மற்றும் அன்டெனா உந்திகள், IoT தொழில்நுட்பத்திற்கு அன்டெனா செய்முறை பற்றியும் கருத்தரங்கில் உரையாட உள்ளனர்.

கருத்தரங்கில் தொழில்பட்டறைகள், தொழில்நுட்ப வகுப்புகள், அமர்வுகள் மற்றும் மாணவர்களுக்கான  போட்டிகளும் நிகழவுள்ளது. தொழில்நுட்ப அமர்வுகளில் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் முந்துருதலை முன்வைப்பார்கள். அவர்களது ஆராய்ச்சி கட்டுரைகள் IEEE XPLORE எனும் ஆராய்ச்சி வலைதளத்தில் பதிவிடப்படும்.அதனால் ஆராய்ச்சியாளர்களது புகழ் உலகெங்கும் பரவ வழியாகும்.

மாநாட்டில் பங்குபெறுவதன்  மூலம்   நுண்ணலைத் துறையில் பிற ஆராய்ச்சியாளர்களை  சந்திக்கவும் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை  அறிந்து கொள்ளவும் முடியும்.

Leave A Reply

Your email address will not be published.