மாணவ மாணவிகளுக்கு திருவிழாவாக மாறிய சிஷ்யாஸ் கலைவிழா – 2019

0
Business trichy

 

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் திருவிழாவானது சிஷ்யாஸ் கலைவிழா !

 

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 3 நாட்கள் கலைவிழா நடைபெற்றது தமிழகத்தில் இருந்து 35 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலை விழாவில் பங்கேற்றார்கள் மூன்று நாட்களும் கலை சங்கமமாக ஆண்டவன் கல்லூரி திகழ்ந்தது கல்வியும் கலையும் இரண்டு கண்களாக போற்றப்பட வேண்டும் என மாணவர்கள் கலையில் ஆர்வம் காட்டினார்கள் காலையில் கல்லூரி அரங்கில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன மாலையில் விளையாட்டுத் திடலில் குழு நடனம் கார்ப்பரேட் வாக் மற்றும் இசைப் போட்டிகள் நடைபெற்றன

 

Kavi furniture

சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணி பாடகி சின்மயி பங்கேற்றார் வெற்றி பெற்றவர்களை மதிப்பெண் பட்டியல் பூட்டப்பட்ட பெட்டியில் இருக்க பலநூறு அடியிலிருந்து பறந்து வந்த ஹெலிகேம் மூலம் பெட்டி சாவியானது பின்னணி பாடகி சின்மயிடம் வந்தது.

 

சாவியை எடுத்து பெட்டியை திறந்து வெற்றி பெற்ற கல்லூரி கலை குழுவினரை அறிவித்து வெற்றிக் கோப்பைகளையும் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

 

தமிழ் பேச்சு போட்டியில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி முதலிடமும் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றது.

 

MDMK

குறும்படப் போட்டியில் ஜே ஜே கல்லூரி முதலிடமும் தூயவளனார் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றது.

 

பல்சுவை நிகழ்ச்சியில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முதலிடமும் தஞ்சை பான் சர்க்கஸ் இரண்டாம் இடமும் பெற்றனர்.

 

நாடகத்தில் தஞ்சை பான் சக்கர்ஸ் கல்லூரி முதலிடமும் தூயவளனார் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றனர். இசைப் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி முதலிடமும் தேசிய கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றனர். சினி சாங் போட்டியில் இந்திராகாந்தி கல்லூரி முதலிடமும் தூயவளனார் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றது.

 

குழு நடனத்தில் ஜமால் முகமது கல்லூரி முதலிடமும் தூயவளனார் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றது. நாடகத்தில் தஞ்சைப் பான்சக்கர்ஸ் முதலிடமும் ஹோலி கிராஸ் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றார்கள். மேலும் பல்வேறு போட்டி பிரிவுகளில் கல்லூரிகள் இடம்பெற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.

 

கலைப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளராக திருச்சி தூய வளனார் கல்லூரி முதலிடமும் தஞ்சை பான்சக்கர்ஸ் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றனர்.

 

ஒட்டுமொத்த வெற்றியாளர் பரிசை திருச்சி தூய வளனார் கல்லூரி தட்டிச்சென்றது.

இரண்டாம் இடம் தஞ்சை பான் சக்கர்ஸ் கல்லூரி

Pranav city

Leave A Reply

Your email address will not be published.