திருச்சி கல்லூரியில் காதலே காதலே பாடிய சின்மயி வீடியோ !

0

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி விளையாட்டுத் திடலில் “சிஷ்யாஸ் – 2019” நிறைவு விழா நடைபெற்றது.

மாநில அளவில் மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கலைவிழாவில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டி, சிலை வடிவமைத்தல், ரங்கோலி கோலங்கள், வண்ணத்தாள்களால் கொலாஜ் ஓவியம், மேடை, ஊமை, குறு நாடகம், குறும்படப் போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, மேற்கத்திய நாட்டுப்புறம், கர்நாடக சங்கீதம், நடனங்கள், வாத்திய இசை, குரலிசை, குழு இசை, ஆடை அலங்கார அணிவகுப்பு எனப் பல்வேறு போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டன.

 

இப்போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு திரைப்பட பின்னணி பாடகி சின்மயி முதலிடம் பெற்ற திருச்சி தூய வளனார் கல்லூரி மற்றும் இரண்டாம் இடம் பெற்ற தஞ்சை பான் சக்கர்ஸ் கல்லூரிக்கும் வெற்றி கோப்பையினையும் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பேசுகையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் மத்திய ஆயுதப்படை வீரர்களின் மரணம் மனதை உடைந்து போக செய்கிறது.

நாம் சுதந்திரமாக இருப்பதற்கு ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றார். மாணவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடுவது மட்டுமின்றி தன்னால் இயன்ற வரையில் மழைநீர் சேகரிப்பு குப்பையை மக்க வைப்பது என ஒவ்வொருவரும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் அம்மங்கி பாலாஜி நிறைவு உரையாற்றினார்.

 

ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம தேசியத் தலைவர் ராஜகோபால் வாழ்த்துரையில், ஆண்டவன் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக உருவாக்க முயற்சிக்க வேண்டும். மாநில அளவில் நடத்தப்படும் கலைவிழா தென்னிந்திய அளவில் நடத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.அறங்காவலர் சுந்தர்ராஜன் துவக்க உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் ராமானுஜம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக கல்லூரி முதல்வர் ராதிகா வரவேற்க துணை முதல்வர் பிச்சைமணி நன்றியுரையாற்றினார்.

 

Leave A Reply

Your email address will not be published.