பிப்ரவரி 16 இந்த நாளில் அன்று

0
Business trichy

பிப்ரவரி 16
இந்த நாளில் அன்று

16/02/1672 – முதல் சட்டப் பத்திரிகை
‘ஜெர்னால்டு பாலெயின்’ பாரிசிலிருந்து வெளிவரத் தொடங்கியது.

16/02/1856- கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கில் கட்டிடங்கள் தரைமட்டமாகின.

Kavi furniture

16/02/1865- இங்கிலாந்தின்
வின்ட்சர் அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டது.
கடும் தீயணைப்புப் போராட்டத்திற்குப் பின் அரண்மனை காப்பாற்றப்பட்டது.

16/02/1917- தென்னாப்பிரிக்கா பாராளுமன்றம் துவங்கியது.

16/02/1918- ரஷ்யாவிடமிருந்து
லிதுவேனியா விடுதலை அடைந்ததாக பிரகடனப் படுத்தியது.

16/02/1918-ஜெர்மனி விமானம் ஒன்று லண்டனின் மீது ஒரு டன் எடையுள்ள குண்டை வீசியது.

16/02/1921- பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சகட்டத்தை எட்டியது.
10 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கினர் முன்னாள் ராணுவத்தினர்.

16/02/1934- ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

16/02/1937- அமெரிக்காவின்
வாலன் கரோத்தர்ஸ்
என்பவர் நைலானுக்கானக் காப்புரிமை பெற்றார்.

MDMK

16/02/1955- சைபீரியாவில் 7,200 மீட்டர் உயரமுடைய மலை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது.

16/02/1959-
பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதம
மந்திரியாக பதவியேற்றார்.

16/02/1962- மேற்கு ஜெர்மனியின் கரைப் பகுதிகளைத் தாக்கிய கடல் வெள்ளத்தால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வீடுகளை இழந்தனர்.

16/02/1980- காலை 11.45 முதல் மாலை 5 மணி வரை முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது .

16/02/1980- பிரான்சில் லியான் நகரிலிருந்து பாரிசை நோக்கி
175 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நின்றன.

16/02/1983-
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில்
இருந்து தெற்கு ஆஸ்திரேலியா வரை இடம்பெற்ற காட்டுத் தீயில் சிக்கி 75 பேர் இறந்தனர். 8,500 பேர் வீடிழந்தனர். 2 லட்சம் கால்நடைகள் உயிரிழந்தது.

16/02/1988-
இலங்கை மகாஜன கட்சித் தலைவர் விஜயகுமார துங்கா கொழும்பு நகரில் அவரது வீட்டின் முன் சிங்களத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

16/02/1998-
தைவானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 196 பேரும் தரையில் 7 பேரும் உயிரிழந்தனர்.

16/02/2007-
2000 -ம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீ வைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக்கொலை செய்த மூவருக்கு தூக்குத் தண்டனையும், மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

16/02/ 2013- பாகிஸ்தான் குவெட்டா நகரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.