தன்னிடம் பாசமாக இருந்த 3½ வயது குழந்தையை கொன்ற திருச்சி இளம்பெண் ஆயுள் தண்டனை 

0
Business trichy

தன்னிடம் பாசமாக இருந்த 3½ வயது குழந்தையை கொன்ற இளம்பெண் ஆயுள் தண்டனை

திருச்சி பாலக்கரை துரைச்சாமிபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியது. இந்த தம்பதிக்கு சிதானி என்கிற 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் சிரிஸ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. சிதானி திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். சிரிசை இந்த ஆண்டு தான் அவருடைய பெற்றோர் திருச்சியில் உள்ள பள்ளியில் பி.கே.ஜி. சேர்த்திருந்தனர். சிவக்குமார் சத்திரம் பஸ் நிலையம் பெரியசாமி டவர்ஸ் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
செல்போன் ரீசார்ச் கடை

loan point

இந்த நிலையில் சிவக்குமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு துரைச்சாமிபுரம் மெயின் ரோட்டில் செல்போன் எண்களுக்கு ரீசார்ச் செய்யும் கடையை தொடங்கினார். அந்த கடையை அவரது மனைவி லெட்சுமிபிரபா கவனித்து வந்தார். இந்த கடை ஆரம்பத்திலே இருந்து துரைச்சாமிபுரம் 4–வது தெருவை சேர்ந்த சேவியரின் என்பவரின் மகள் ரோஸ்லின் பாக்கியராணி (வயது 23) வேலை பார்த்து வந்தார். கடைக்கு லெட்சுமி பிரபா தனது குழந்தைகளை கூட்டு வருவது வழக்கம். இதனால் ரோஸ்லின் பாக்கியராணி, கடைக்கு வரும் அந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவார். தற்போது சிரிசை பள்ளியில் சேர்த்ததால் விடுமுறை நாளுக்கு மட்டும், தனது அக்கா சிதானியுடன் சேர்ந்து வருவது வழக்கம்.
வேலையில் இருந்து நீக்கினார்

nammalvar

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லெட்சுமிபிரபாவிற்கும், கடையில் வேலை பார்த்த ரோஸ்லின் பாக்கியராணிக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கடந்த 25–ந்தேதி ரோஸ்லின் பாக்கியராணியை அவர் வேலையை விட்டு நிறுத்தினார். அப்போது அவர் லெட்சுமிபிரபாவிடம் வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு கெஞ்சினார். பின்னர் மறுநாள் என தொடர்ந்து கடைக்கு வந்து மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ளுமாறு லெட்சுமி பிரபாவிடம், ரோஸ்லின் பாக்கியராணி கேட்டுள்ளார். இந்த நிலையில்  பள்ளிக்கு விடுமுறை என்பதால் கடைக்கு லெட்சுமிபிரபா தனது 2 குழந்தைகளுடன் வந்துள்ளார். இதனை தொடர்ந்து அன்று மதியம் 12.30 மணியளவில் சிதானி, தனது தம்பி சிரிசுடன் கடையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு ஸ்கூட்டரில் வந்த ரோஸ்லின்பாக்கியராணி சிரிசை கூப்பிட்டுள்ளார். இதையடுத்து உடனே சிரிசும், அவர் அருகே சென்றான். பின்னர் சிரிசை ரோஸ்லின் பாக்கியராணி ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு சென்று விட்டார். இதனை பார்த்த சிதானி தாய் லெட்சுமிபிரபரிவிடம் இது பற்றி கூறியுள்ளார். அவர் சீக்கிரம் குழந்தையை கொண்டு வந்து தந்து விடுவார் என்று எண்ணிவிட்டு கடையை அடைத்து விட்டு மகளுடன் சாப்பிட வீட்டிற்கு சென்றார்.

போலீசில் சரண்

இதனை தொடர்ந்து  அன்று மதியம் 2.30 மணியளவில் குழந்தையுடன் ரோஸ்லின்பாக்கியராணி, லெட்சுமிபிரபாவிற்கு சென்றார். பின்னர் வீட்டில் இருந்த சிவக்குமாரின் தாய் லெட்சுமியிடம் குழந்தை தூங்கி விட்டதாக கூறிவிட்டு கொடுத்து விட்டு சென்றார். அப்போது மயங்கிய நிலையில் இருந்ததாலும், உடலில் காயங்கள் இருந்ததாலும் குழந்தையை லெட்சுமிபிரபா தூக்கி கொண்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் லெட்சுமிபிரபா குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அங்கு கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சத்தையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் மதியம் சுமார் 3 மணியளவில் ரோஸ்லின் பாக்கியராணி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் சென்று அங்கிருந்த போலீசாரிடம் தான் வேலை பார்த்த கடையின் உரிமையாளரின் மகன் சிரிசை கொலை செய்துவிட்டேன் என்று சரண் அடைந்தார்.

 

இதையடுத்து பாலக்கரை போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிரேத கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த சிவக்குமார் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.

web designer

கழுத்தை நெறித்து கொலை

இதனை தொடர்ந்து ரோஸ்லின்பாக்கியராணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில்..

சிவக்குமாரின் மனைவி லெட்சுமிபிரபாவின் செல்போன் கடையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கும்–லெட்சுமிபிரபாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவர் என்னை வேலையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு தினசரி கடைக்கு சென்று லெட்சுமிபிரபரிவிடம் கெஞ்சுவன். இதனை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் மீது எனக்கு கோபம் ஏற்பட்டது. மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ளுமாறு இன்று அதாவது  கடைக்கு ஸ்கூட்டரில் சென்றேன். அப்போது கடையில் இருந்து லெட்சுமிபிரபாவின் குழந்தைகளான சிதானி மற்றும் சிரிஸ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சிரிசை கூப்பிட்டேன். அவனும் உடனடியாக ஓடி வந்தான். இதையடுத்து அந்த குழந்தையை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு அதே பகுதியில் உள்ள தனது சித்தி விட்டிற்கு அடுத்த ஒரு பாழடைந்த வீட்டின் அருகே சென்றேன்.

 

பின்னர் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு குழந்தையை அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு சென்றேன். பின்னர் லெட்சுமிபிரபா என்னை வேலையை நீக்கி விட்டு நிம்மதியாக வாழ்கிறாள். இதற்கு பழிவாங்குவதற்கு அந்த குழந்தையை தனது சாலால் கழுத்தை நெறித்து கொன்றேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னிடம் பாசமாக இருந்த குழந்தையை கொன்ற இளம்பெண்

சிவக்குமார்–லெட்சுமிபிரபா என்கிற தம்பதிக்கு 2–வது பிறந்த குழந்தை தான் சிரிஸ். இந்த பிறந்த குழந்தையை சில மாதங்களுக்கு பின்னர் லெட்சுமி பிரபா தினசரி கடைக்கு தூக்கி கொண்டு போவது வழக்கம். இதனால் கடையில் வேலை பார்க்கும் ரோஸ்லின்பாக்கியராணி அந்த குழந்தையுடன் அதிகம் நேரம் விளையாடுவார். இதனால் அந்த குழந்தை தாய் லெட்சுமிபிரபாவிடம் இருக்கும் பாசத்தை போல ரோஸ்லின்பாக்கியராணியிடம் மிகுந்த பாசமாக இருக்கும். இந்த நிலையில் எங்கும் விளையாடி கொண்டிருந்தாலும் அந்த குழந்தை ரோஸ்லின்பாக்கியராணியை எங்கு கண்டாலும் அவர்கிட்டே போய்விடும். தாய்க்கு நிகராக தன்னிடம் பாசமாக இருந்த குழந்தையை ரோஸ்லின்பாக்கியராணி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாலக்கரை போலிசார் வழக்கு பதிவு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி குமரகுரு நேற்று தீர்ப்பு கூறினார். அதில், “குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்லின் பாக்கியராணிக்கு 2 பிரிவுகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும்” விதித்தார். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார். இதையடுத்து ரோஸ்லின் பாக்கியராணியை போலீசார் திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.