உலக நிகழ்வுகளை உரக்கக் கூறிய ஊமை நாடகங்கள்

0
1

உலக நிகழ்வுகளை உரக்கக் கூறிய ஊமை நாடகங்கள்

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி கலை விழாவை மூன்று நாட்கள் நடத்துகிறது கலைவிழாவில் உலக நிகழ்வுகளை உரக்கக் கூறிய ஊமை நாடகம் உள்ளத்தை தொடுவதாக அமைந்தது கற்பனையும் உணர்வுகளையும் தன்னை அடையாளப் படுத்தாமல் அரிய கருத்துக்களை எடுத்துரைப்பது ஊமை நாடகம் ஆகும் தமிழகத்திலிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றனர் அதில் பெரம்பலூர் ரோவர் கல்லூரி வினோத், அலெக்ஸ், பாலாஜி, ஆர்யா, ரங்கநாதன், அவினாஷ் உள்ளிட்டவர்கள் திறமைக்குத் தகுந்த வாய்ப்பினை சமூகம் வழங்க வேண்டும் என உடல் மொழிகள் மூலம் எடுத்துரைத்தனர் . நவீன காலங்களில் முக்கால் வாட்சப் டிவிட்டர் இன்ஸ்டிராகிராம் என செல்போன் உள்ளங்கையில் உலகின் நிகழ்வுகளை நொடிக்கு நொடி கொடுத்துக் கொண்டிருக்கின்றது அதே சமயத்தில் பயன்படுத்துபவர்கள் செல்ஃபி மோகத்தால் முகநூலிலும் தனது படத்தை வெளியிடுகின்றார்கள் அப்படம் எங்கு செல்கின்றது என்பதை அனைவரும் அறிய வேண்டும் பார்ப்பவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் உணர்ந்து நடக்க வேண்டும் என உணர்ச்சிப் பிழம்பாய் அனிதா பால தர்ஷினி தங்க பிரியா ஸ்ரீவித்யா சினேகா கவிபாரதி உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாதனா சிவரஞ்சனி கார்த்தி அகிலா பிரபாவதி பீமாராவ் உள்ளிட்டோர் தற்கொலைதான் தீர்வாகுமா ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு நிமிடம் சிந்தித்தால் தடைக்கல்லும் படிக்கல்லாகும் என்றனர் பான் செக்கஸ் கல்லூரி அசோகரின் வாழ்க்கை வரலாற்றினை இலக்கியா காவியா தீபா கௌசல்யா ராஜலட்சுமி உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர் கேர் கல்லூரி மாணவர்கள் கமல் ராஜ் ஹேராம் ராஜேஷ் ஆனந்த் குமார் பரத் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் பெண்கள் சில ஆண்களால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துரைத்தனர்.

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாற்றினை உமர் அல்தாப் ஆசின் ரங்கேஸ்வரன் முகமது கனி மணி மாறன் உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர் எம் ஏ எம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதலால் கொல்லப் பட்டதையும் தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்து வீரவணக்கம் செய்தனர் தூய வளனார் கல்லூரி மாணவர்கள் அன்னையின் அன்பினை ஹேமந்த்குமார் அருள் வசந்தகுமார் கில்பர்ட் அர்னால்ட் ராபர்ட் உள்ளிட்டவர்கள் உரக்கக் கூறினார்கள் மேரி மாதா கல்லூரி மாணவர்கள் ஜேம்ஸ் அன்பு பாலகிருஷ்ணன் ராம் பிரகாஷ் அஜித் உள்ளிட்டவர்கள் கருத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார்கள் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மாணவிகள் சந்தியா நந்தினிதேவி ஜெயசுந்தரி ராஜஸ்ரீ நிவேதா திவ்யஸ்ரீ உள்ளிட்டவர்கள் இயற்கையை காப்போம் காப்போம் என கூறினார்கள் இவ்வாறு தமிழகமெங்கும் வந்திருந்து உலக நிகழ்வுகளை ஊமை நாடகம் மூலம் உரக்கக் கூறினார்கள்

3

Leave A Reply

Your email address will not be published.