கோலப்போட்டியில் கோலோச்சிய கல்லூரி மாணவர்கள்.

கோலப்போட்டியில் கோலோச்சிய கல்லூரி மாணவர்கள்.

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் மூன்று நாட்கள் சிஷ்யாஸ் கலை விழா நடைபெறுகிறது மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் கோலப்போட்டியும் ஒன்றாகும் .
கலை என்ற தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர் எழுத்துக்கலை பேச்சுக்கலை ஓவியக்கலை சிற்பக்கலை நடனக்கலை பரதக்கலை நாட்டுப்புறக்கலை வீர விளையாட்டு பாரம்பரிய மரபுகலை மற்றும் கருவறையிலிருந்து கல்லறை வரை தொடரும் கலைகளை மாணவர்கள் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியிருந்தனர் .இதற்காக மாணவர்கள் கோல மாவில் உப்பு அரிசி மலர்கள் இலைகள் போன்றவற்றில் வண்ணங்கள் கலந்து கோலங்களை வரைந்தனர் பெண்களுக்குப் போட்டியாக ஆண்களும் கோலப் போட்டியில் களம் இறங்கியது சுவாரசியமாக அமைந்தது.
