எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

0
1

திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டாட்சியர் அலுவலகத்தில்

வருகின்ற 16.02.2019 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 16.02.2019 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி  தெரிவித்துள்ளார்.

2
4

எரிவாயு நுகர்வோர்களுக்கான சிலிண்டர் வழங்குவதில் எற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு மற்றும் மேற்கு) வட்டங்களுக்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி(மேற்கு) வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.02.2019) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்  நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு மற்றும் மேற்கு) வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் மறுநிரப்பு பதிவு செய்து பெறுவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் தாமதப்போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்கள் மனுக்கள் மூலமாக பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு மற்றும் மேற்கு) வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை மனுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி  தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.