திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏன் இடமில்லை?

0
1

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தேசம் காப்போம் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்தேன்.

2

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்பது வெறும் யூகம் மட்டுமே. பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பார்களா என்பது அவர்களுக்கிடையே நடக்கும் மவுன யுத்தம்தான். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக மீது மக்களுக்கு இருக்கும் அத்தனை வெறுப்பும் அதிமுக பக்கம் திரும்பும் என்பதே அதிமுக முன்னணி தலைவர்களின் அச்சம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. இப்போது திடீரென மீனவ சமுதாயங்களை திருப்திப்படுத்தும் வகையில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஹெக்டேர் நிலம் கொண்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 தருவதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில் 25 கோடிக்கும் மேலான நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர்.

4

இந்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும் கவர்ச்சிகரமாக உள்ளதே தவிர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இல்லை. மக்களவைத் தேர்தலுக்கான போலி வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையாகவே இந்த பட்ஜெட் உள்ளது” என்று கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்