உலகக் கோப்பை யாருக்கு? சச்சின் கணிப்பு!

0

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மும்முரமாகத் தயாராகிவருகிறது. இந்த முறை எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்ற விவாதங்கள் சர்வதேச அளவில் தொடங்கியுள்ளன. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் தனது கணிப்பு குறித்து பேசியுள்ளார்.

விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி இந்தியாவுக்கு வெளியே தென் ஆப்ரிக்கா (5-1), ஆஸ்திரேலியா (2-1), நியூசிலாந்து (4 -1) அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றியுள்ளது. சிறப்பான பங்களிப்பை இந்திய வீரர்கள் வழங்கி வந்தாலும் இங்கிலாந்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் அந்த அணிக்கு எதிரான தொடரை மட்டும் இழந்தது.

food

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் பிடிஐ-க்கு பிப்ரவரி 3ம் தேதி அளித்த பேட்டியில், “உலகின் எந்தப் பகுதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இந்திய அணி விளங்குகிறது. மிகக் கச்சிதமான கலவையில் அணி அமைந்துள்ளது. உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு என்பதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் போட்டியில் தொடக்கத்திலேயே உத்வேகம் பெறுவதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் கடுமையான போட்டியாளராக இங்கிலாந்து அணி இருக்கும் என்று மதிப்பிடுகிறேன்.

 

அதே சமயம் நியூசிலாந்தையும் விட்டு விட முடியாது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர்கள் தடுமாறினாலும் சிறந்த அணியாகவே இருக்கிறார்கள். ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் அணிக்குத் திரும்பும் போது ஆஸ்திரேலியாவும் பலம் பொருந்திய அணியாக மாறி விடும்” என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.