வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் தாய், தந்தையை வழிபடுங்கள் – முன்னாள் காவல் துறை அதிகாரி அ.கலியமூர்த்தி.

0
Business trichy

சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் பாதபூஜை விழா

சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில கடந்த 10.02.2019 (ஞாயிற்றுக்கிழமை); வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக்; மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைநகர் AKKV ஆறுநாடு மேல்நிலைப் பள்ளி, செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம; புதுக்கோட்டை சௌடாம்பிகா PSK மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லம்மாள் வித்யாலயா (CBSE) மற்றும் சௌடாம்பிகா மவுண்ட் லிட்டரா ஜீ பள்ளியின் 10ம் மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள சுமார் 1200 மாணவ,மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களிடம் ஆசி பெறுகின்ற பாத பூஜை விழா நடைபெற்றது.

UKR

இவ்விழாவில் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர்  எஸ். இராமமூர்த்தி; தலைமை வகித்தார், கல்வி குழுமத்தின் செயலாளர் ஆர். செந்தூர் செல்வன் முன்னிலை வகித்தார். செல்லம்மாள் வித்யாலய பள்ளி முதல்வர் உஷா குமாரசாமி இந்நிகழ்ச்சியை நடத்தினார்.  இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல் துறை அதிகாரி அ.கலியமூர்த்தி; கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்காக கனவு காண்பதைவிட மாணவர்கள் தங்களின் சாதனைக்காக தாங்களே கனவு காணவேண்டும். அந்தக் கனவு நிச்சயம் மெய்ப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தங்களின் எதிர்காலத்தைப் பற்றி பில் கேட்சும், அப்துல் கலாமும் கனவு கண்டார்களே ஒழிய அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்காக  கனவு காணவில்லை.

BG Naidu

அம்மாவின் அன்பு புனிதமானது, ஆற்றல் கொண்டது. வலிமை மிக்கது. கடவுளின் சக்தியைவிட சக்தி வாய்ந்தது. எனவே மாணவர்கள் அம்மாவின் அன்பைப் பெற்றால் இவ்வுலகில் அனைத்தையும் வென்று சாதனை மாணவனாக நாளைய சமுதாயத்தில் தலை சிறந்த குடிமகனாக விளங்குவீர்கள்.

குடும்பத்தின் நலனுக்காக அனுதினமும் பாடுபடுகின்றவர் அப்பா. அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது. அதேபோல் அவர் வலியும் வெளிப்படாது.

பெற்றோர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரமாவது உடன் இருங்கள். அவர்களின் சந்தோஷங்கள், கஷ்டங்களைப்பற்றி அவர்களுடன் கலந்துரையாடல் செய்யுங்கள்.  அவர்களின் தவறுகளைத் திருத்துங்கள். மாணவர்கள் சிறுவயதில் செய்யக்கூடிய சிறுசிறு தவறுகள்; பிற்காலத்தில்தான் பெரிய தவறுகளுக்கு வழிவகுக்கும்.

பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்குப் பொருட்;களைச் சேர்க்காதீர்கள். மாறாக நல்ல புதல்வர்களை உருவாக்குங்கள், ஏனெனில் பொருட்கள்ஒரு காலகட்டத்தில் அழிந்து போகலாம்.

அரசு பொதுத் தேர்வை சந்திக்கும் இத்தருணம் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனை உணர்ந்து, தங்களின் குழந்தைகளின் எதிர்கால உயர்விற்காக தனக்குக் கிடைக்காத கல்வி தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டுமென்று முதுகெலும்பு முறிய பாடுபடும் பெற்றோரை மனதில் நினைத்துக் மாணவர்கள் கல்வியை கற்று  கனவை நிறைவேற்ற வேண்டும்.

பிள்ளைகளே, வரும் காலங்களில்; பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விடாதீர்கள். ஏனெனில் அதனைவிட பெரிய பாவம் ஏதும் இல்லை. வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் தாய், தந்தையை வழிபடுங்கள். வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.   

இவ்விழாவில் முதன்மை முதல்வர் பகவதியப்பன் அவர்கள், கல்வி ஆலோசகர் சுமதிதேவி அவர்கள், குழும பள்ளிகளின் முதல்வர்கள்    ராஜ்மோகன், நடராஜன், மற்றும் அனைத்து பள்ளி துறை தலைவர்கள் மற்றும் இருபால் ஆசிரியபெறுமக்கள்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் ராஜா மேல்நிலை முதல்வர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.