திருச்சியில் 11  இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் !

0
Business trichy

திருச்சியில் 11  இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் !

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலையொட்டி திருச்சி மாநகரில் 3 ஆண்டாக பணியாற்றி வரும் 9 பேரை அதிரடியாக மாற்றம் செய்து மாநகர கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

web designer

இதன்படி ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உமாசங்கர், வெடிபொருட்கள் கண்டறியும் பிரிவுக்கும், கண்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், பொன்மலை சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், கொடுஞ்செயல்  க்ரைம் ஸ்குவாட் 1 இன்ஸ்பெக்டர் ரோசலின், பொன்மலை குற்றப் பிரிவிற்கும், உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி, கொடுஞ்செயல்  க்ரைம் ஸ்குவாடு -1க்கும், சைபர் க்ரைம்  இன்ஸ்பெக்டர் காவேரி, ஏர்போர்ட்டுக்கும், ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் பெரியய்யா, சைபர்  க்ரைம் பிரிவிற்கும், செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி, கண்டோன் மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், கே.கே.நகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகன், செக்யூரிட்டி பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, கே.கே. நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

loan point

அரியலூர் மாவட்டத்தில் இருந்து இடமாற்றத்தில் வரும் இன்ஸ்பெக்டர் சுப்பையா கண்டோன்மெண்ட் குற்றப் பிரிவிற்கும், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்குப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.