சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அஞ்சல் தலை கண்காட்சி

0
1

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்றது.

4

கண்காட்சியில் இந்திய அஞ்சல் துறை போக்குவரத்து விதிகள் கடைப்பிடிப்பதற்காக வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறைகள் மற்றும் முத்திரைகளை கொண்டு காட்சிப்படுத்தப்பட்டது அதில் சாலை விதிகள், சாலை குறியீடு, நடைபாதைகள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் ஒலிப்பான்கள் ஒலிக்கக் கூடாது , ஒருவழிப்பாதை வாகனங்கள், ஓட்டும்போது மது அருந்தி இருக்கக் கூடாது, பாதசாரிகள் நடப்பதற்கான நடைபாதையை பயன்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு சாலை விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடை பிடிக்க வேண்டுமென அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை அஞ்சல் தலை சேகரிப்புக்கலை மூலம் எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கிளப் நிறுவனர் நாசர் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சந்திரசேகரன், பாண்டியன், கார்த்திகேயன், ஹீராலால் ,முகமது சுபேர் ,கமலகண்ணன், கருணாமூர்த்தி, மதன், ராஜேஷ் ,இளங்கோவன், பத்ரி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றார்கள் முன்னதாக திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் வரவேற்க செயலர் குணசேகரன் நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.