ரானேதொழில்நுட்பகல்லூரியின் ரானே வைபவம் – 2019

0
Full Page

மாநிலஅளவிலானதொழில்நுட்பகருத்தரங்கம்

“ரானேவைபவம் 2019”

Half page

ரானே பல்தொழில் நுட்ப கல்லூரி தனது இரண்டாவது மாநிலஅளவிலான தொழில் நுட்பகருத்தரங்கம்–“ரானேவைபவம் 2019” – ஐ (National Level Technical Symposium – RANE VAIBHAV-2K19)09.02.19அன்றுநடத்தியது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப தங்களை வளர்த்து கொள்ள தேவையானஅடித்தளத்தைஅமைத்துகொள்ளும் வகையில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கருத்தரங்கின் துவக்கவிழாகாலை 9.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி துவக்கப்பட்டது.  இவ்விழாவில் கல்லூரிமுதல்வர் சங்கர் தலைமை தாங்கினார். ராஜலெட்சுமி( Head – Educational Initiatives, Rane Holdings Limited ) வரவேற்புரை ஆற்றினார்.  இளங்கோவன், Advisor, Rane TRW, Uttranchal முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை துவக்கிவைத்தார். ராமநாதன், Head Operations, RANE Brake Linings Ltd., Trichy  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இக்கருத்தரங்கில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு வழங்கல் (Paper Presentation) கணினிசார்ந்த 2D& 3D வரைபடம்,இயந்திரம் பிரித்து சேர்த்தல்;(Machines Dismantling & Assembling) மற்றும் மின்னனு சுற்றுபிழைதிருத்தம் (Circuit Debugging) ஆகியபோட்டிகள் நடத்தப்பட்டன. 35கல்லூரிகளிலிருந்து 240மாணாக்கர்கள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொருபோட்டியிலும் 25 அணிகள் பங்கேற்றது. மாணவர்கள் மிகுந்தஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டார்கள். மாலை 4.30 மணிக்குகருத்தரங்கின் நிறைவுவிழாதொடங்கியது. சங்கர்,கல்லூரிமுதல்வர்விழாவின் நிறைவுரையாற்றினார். அதனையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றோர்க்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சத்தியநாராயணன், மூன்றாமாண்டு இயந்திரவியல் துறைமாணவர் அவர்கள் நன்றியுரை கூற கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.