திருநெல்வேலியில் ஆதியோகி ரதம்: மக்கள் உற்சாக வரவேற்பு

0
Full Page

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவையில் இருந்து திருநெல்வேலி வந்த ஆதியோகி ரதத்துக்கு மக்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25-வது மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ம் தேதி 112 அடி ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, நள்ளிரவு தியானம், தலைசிறந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், மஹா அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும், ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம் மற்றும் சர்ப்ப சூத்திரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

Half page

மக்கள் ஆதியோகியை தரிசிக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 5 ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள ஆதியோகியில் இருந்து கடந்த பிப்ரவரி 1-ம் தேதி புறப்பட்ட ஒரு ரதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்தது.

அரசன் நகரில் காலை 9 மணிக்கு குரு பூஜையுடன் ரத ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து தச்சநல்லூர், சங்கர் நகர், ராஜவள்ளிபுரம், செப்பரை, கே.டி.சி.நகர், சாந்தி நகர், வி.எம்.சத்திரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றது. மேலும், சாரதா கல்லூரி மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கும் ஆதியோகி ரதம் சென்றது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் இந்த ரதம் மார்ச் 3-ம் தேதி கோவை சென்றடையும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.