சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியின் ஒரு நாள் பணிப்பட்டறை

முதுகலை மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி துறை
முதுகலை மின்னணுவியல் துறை
லேப்டாப் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஒரு நாள் பணிப்பட்டறை


சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியின் முதுகலை, ஆராய்ச்சி இயற்பியல்; துறை மற்றும் முதுகலை மின்னணுவியல் துறையும் இணைந்து நடத்திய “லேப்டாப் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் தீர்வுகள்” பற்றிய ஒரு நாள் பணிப்பட்டறை 06.02.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் இயற்பியல்துறை தலைவர் முனைவர்.இரா.பத்மாவதி வரவேற்புரை நல்கி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
பொறியாளர் பரிமள பிரபு, நிறுவன தலைவர் டெசிபல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் பல்வேறு துறைகளை சார்ந்த பங்கேற்பாளர்களுக்கு லேப்டாப் பற்றிய அறிமுகம்,அதன் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிய தனது விரிவுரையை ஆய்வகத்தில் செய்முறை வாயிலாக வழங்கினார்.
இறுதியில் டாக்டர்.சீதாலட்சுமி, உதவி பேராசிரியர் இயற்பியல் துறை, சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
