சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது !

0
1

சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது என்பார்கள்!…

அப்படியான ஒரு அழகிய நிகழ்வு 09.02.2019 சனிக்கிழமை மாலை திருச்சி ரஸிக ரஞ்சன சபாவில் நடந்தது!…

திருச்சியில் செயல்பட்டுவரும் மாமனிதன் நாடக நடிகர்கள் சங்கத்தின் மாபெரும் முப்பெரும் விழா நடத்த முடிவு செய்து அதை எப்படி செய்யலாம் என விவாதித்து சிறப்பாக குழு அமைத்து செய்தனர்.

4

    புகைப்படம் எடுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது!.. சரி செய்துவிடும் என்று முடிவு செய்தேன்

அதில் அந்த குழுவின் தலைவர் திரு.டேவிட் அவர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட நாடிகர்கள் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் திரு. ஜெரால்டு அவர்கள் என சங்க நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பும் சுதந்திரமும் கொடுத்திருந்தார்கள்!..

நாலரை மணி நேரத்திற்குள்(மதியம் 2.00 மணி முதல் மாலை 6.30 மணிக்குள், இடை, இடையே நடனம், விருது வழங்குதல் என) 8 நாடகங்களை அரங்கேற்றி புதிய சாதனையும் செய்தார்கள்!.. ஒரு நாடகம் அரை மணிநேரத்திற்குள் இருக்க வேண்டும்.

பெரும்பாலும் நாடக நடிகர்கள் தாங்கள் நடிக்கும் மேடையின் புகைப்படங்களை பெற மிகுந்த சிரம பட்டதாகவே சொன்னார்கள்….

அப்படியானால் அங்கு நடக்கும் நாடகங்களின் கதாபாத்திரத்தோடு உடனடி புகைப்படம் செய்து கொடுப்போம் என முடிவு செய்தேன். அது சாத்தியமா என ஐயமும் ஏற்பட்டது.

2

எதுவுமே சாத்தியமே!… சரியான திட்டமிடல் இருந்தால் என முடிவு செய்தேன். ஏன் என்றால் அதற்கு அருகே தீபம் கலர் லேப் இருப்பதால்!..

உடனடியாக தீபம் கலர் லேப் திரு.பாலாஜி அவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தேன். நானே படமும் எடுத்து அதை உடனடியாக போட்டோஷாப்பில் ஏற்கனவே செய்து வைத்திருந்த டெம்ப்லேட்டில் வைத்து பென் டிரைவ் மூலம் லேபிற்கு அனுப்புவேன். அதை 20 நிமிடங்களுக்குள் பிரிண்ட் செய்து தரவேண்டும் என்றேன்…..

(உடனடி பிரிண்ட் அங்கேயே வைத்து பிரிண்டர் மூலம் தருவது நீண்ட காலத்திற்கும் சரி வராது என்பதால்)

இங்கே தீபம் கலர் லேபிற்கு பெரும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தனை நெருக்கடியான நேரத்திலும் அந்த நாடகம் முடியும் முன்பாகவே பிரிண்ட் வந்து சேர்ந்ததது…..

அதற்காக நான் எனது நண்பர் திரு. மோகன்ராஜ் அவர்களை ஓட விட்டிருந்தேன்!…

அந்த படங்களை பார்த்த அந்த நாடக கலைஞர்களின் முகங்களில் அப்படி ஒரு சந்தோஷம்!….

இந்த விழாவில் முக்கிய விருந்தினர்களாக வந்திருந்த நடிகை கோவை சரளா, நடிகர் திரு. ராஜேஸ், சிங்கம்புலி, இயக்குநர்கள் சற்குணம், ரெத்தின சிவா Hallo FM டயரி புகழ் சகா மற்றும் தயாரிப்பாளர்கள் என நிறைய திரைப்படம் சம்பந்தமான கலைஞர்கள் வந்திருந்தனர்.

அப்படி கொடுக்கப்பட்ட படத்தை விழாவில் மிகப்பெருமையாக தலைவர் அவர்கள் சொல்லி அதை மேடையில் காட்டியபோது அங்கிருந்த அனைவரும் சிறப்பான செயல் என பாராட்டியது மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது.

கோவை சரளா அவர்கள் அந்த படத்தை வெகு நேரம் பார்த்து ரசித்து என்னிடம் கை கொடுத்து வாழ்த்து சொன்னார்கள்!….

அதில் என் நண்பன் ஶ்ரீரங்கம் சிவாவிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள வேண்டும்!…. என்னோடு அவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொடுத்தார்!…

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்